கொரோனா தொற்று மற்றும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள்! - ஆட்சியர் நேரில் ஆய்வு
கோவை :
கோயம்புத்தூர் மாவட்டம், சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் கொரோனா தொற்று மற்றும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளிடம் முகக்கவசம் அணிவது சமூக இடைவெளியை கடைபிடிப்பது குறித்தும் பேருந்து நிலையத்தில் கொரோனா பரிசோதனை முகாம் நடைபெற்றதை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அதனைத்தொடர்ந்து, சர்க்கார் சாமக்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் கோவில்பாளையம் சாலை முதல் கீரணத்தம் ஏடிகாலனி வரை ரூ.1.10கோடி மதிப்பில் தார் சாலை மேம்படுத்துதல் பணி நடைபெற்று வருவதை ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு குறிப்பிட்ட விகிதாரச்சார அடிப்படையில் ஜல்லி, மணல் மற்றும் கலவைகள் முறையாக உபயோகப்படுத்தப் பட்டிருப்பதை, சாலையினை துளையிட்டு பரிசோதித்து பார்த்தார்.
பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த அரசு வழிகாட்டுதலின்படி, பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதன் அடிப்படையில் தற்போது கொரோனா தொற்று பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த மே மாதம் கொரோனா இரண்டாவது அலையின் போது மாவட்டத்தில் தினசரி 4500 மேற்பட்ட தொற்றுக்கள் பாதிப்புகள் கண்டறியப்பட்டது. அரசு மேற்கொண்ட சீரிய நடவடிக்கைகளினால் தொற்று பரவல் கட்டுப்படுத்தப்பட்டு தற்போது தினசரி கொரோனா தொற்று பாதிப்பு 100 ஆக குறைந்துள்ளது. இதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு மிக முக்கிய காரணமாக இருந்தது. மேலும், நம் மாநிலத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணியில் கோவை மாவட்டம் 2ஆம் இடத்தில் உள்ளது. அதன்படி, மாவட்டத்தில் முதல் தவணை தடுப்பூசி 92 சதவீதமும், இரண்டாவது தவணை தடுப்பூசி 60.12 சதவீத மக்களுக்கு போடப்பட்டுள்ளன.
கோவை விமான நிலையம் சர்வதேச விமான நிலையம் என்பதால் வெளிநாடுகளிலிருந்து வருபவர்களால் புதிய வகை கொரோனா தொற்று பரவல் தடுக்க கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பயணிகளுக்கு கட்டயமாக RTPCR test எடுத்து கொரோனா தொற்று இல்லை என தெரியவந்த பின்னர்தான் பயணிகள் விமான நிலையத்திலிருந்து வெளியில் அனுப்பப்படுகிறார்கள். மேலும், மாவட்டத்தில் பொதுவெளிகளில் முகக்கவசம் அணியாமல் மக்கள் நடமாடுவதை பார்க்கமுடிகிறது.
அதிக அளவிலான கொரோனா பரிசோதனைகள், தொற்று ஏற்பட்டுவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து தனிமைப்படுத்துதல், முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியினை முறையாக பின்பற்றுதல் போன்ற நடவடிக்கைகளினால் மட்டுமே தொற்று பரவல் கட்டுப்படுத்தப்படுகிறது. இதுதொடர்பாக பொதுமக்களிடமிருந்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் பொதுமக்களிடத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
பொதுவெளியில் முகக்கவசம் அணியதாவர்களிடம் கட்டாயம் அபாரதம் வசூலிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல் வணிக நிறுவனங்கள், மளிகை கடைகள், ஜவுளி கடைகள், உள்ளிட்ட அனைத்து விதமாக கடைகள், உணவகங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் பணியாளர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருப்பதுடன், வாடிக்கையாளர்களும் முகக்கவசம் அணியவேண்டும்.
தற்போது, சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் தொற்று எண்ணிக்கை அதிகமாக உள்ளது. தினசரி 100 மேற்பட்ட பாதிப்புகள் அதாவது, கொரோனா தொற்று பரவல் விகிதம் 1.2 சதவிகிதமாக உள்ளது. எனவே, பள்ளிகள், கல்லூரிகள், தொழில் நிறுவனங்கள் என அனைத்தும் திறக்கப்பட்டுள்ளன.
நம் இயல்பான வாழ்க்கை வாழுகின்றபோதிலும், கண்டிப்பாக கொரோனா வழிகாட்டி நெறிமுறைகளை பொதுமக்கள் பின்பற்றவேண்டும் என்பதுதான் அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் வேண்டுகோளாக உள்ளது.
மேலும், கொச்சி விமானநிலையத்தில் சர்வதேச விமானத்தில் வரும் பயணிகளுக்கு கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்யப்படும். பரிசோதனை முடிவுகள் 3-4 மணிநேரத்திற்கு வந்துபின்பு பரிசோதனை முடிவின் அடிப்படையில் பயணிகளை விமானநிலையத்திலிருந்து வெளியில் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். அத்துடன் தென்ஆப்பிரிக்கா உள்ளிட்ட 12 நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு சிறப்பு பரிசோதனை மேற்கொள்ளப்படும்.
பின்னர் அங்கிருந்து கோவை மாவட்ட எல்லையின் உள்ளே வரும்போது வாளையார் உள்ளிட்ட 12 சோதனை சாவடிகளில் உள்ளாட்சி அமைப்புகள், வருவாய்த்துறை, சுகாதாரத்துறை ஆகிய துறைகளின் மூலம் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். ஜி.எஸ்.சமீரன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து, சிங்காநல்லூர், உதவி ஆணையாளர் அலுவலகம் அருகில் உள்ள போயர் வீதியில் உள்ள வீடுகளில் சரியாக மூடாத நீர் சேமிக்கும் தொட்டிகள், டிரம்கள், டயர்கள், தேங்காய் ஓடுகள், ஆகியவற்றில் டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தும் ஏடிஸ் கொசுக்கள், உற்பத்தி இடங்களை ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டதுடன், அப்பகுதி மக்கள் உபயோகத்திற்காக வைத்திருக்கும் தண்ணீரை சேமிக்கும் கலன்களை கொசுக்கள் புகுந்து முட்டை இடாத வண்ணம் முழுமையாக மூடி வைக்கவும், தண்ணீர் தேங்கமால் சுற்றுபுறத்தை சுத்தமாக பராமரிக்கவும் மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார்.
இவ்வாய்வின்போது மாநகராட்சி ஆணையாளர் .ராஜகோபால் சுன்கரா மாநகராட்சி நகர் நல அலுவலர் மரு.சதீஷ்குமார், சிங்காநல்லூர் உதவி ஆணையாளர் செந்தில்குமார்ரத்தினம், உதவி செயற்பொறியாளர் சுந்தர்ராஜன், மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments