வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நஷ்டஈடு கோரி கண்டன ஆர்ப்பாட்டம்
விருத்தாசலம்:
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நஷ்டஈடு கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சிவிருத்தாசலம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூபாய் 5000 வீதம் வழங்க வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் விருத்தாசலம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு வட்ட செயலாளர் ராவணராஜன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
இதில் பட்டுசாமி, அறிவழகன், விஜய, பாண்டியன், வேல்முருகன், துரைராஜ், ராஜசேகர் உள்ளிட்டோர் விளக்க உரையாற்றினார்கள்.
மேலும் தமிழ்நாட்டில் பெய்துவரும் தொடர் மழையால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு தலா ரூ. 5,000 உடனடி வழங்கவேண்டும்.
விருத்தாசலம் வட்டத்தில் நெல் மரவள்ளி உளுந்து திணை உள்ளிட்ட விவசாயம் தொடர் மழையால் அழித்துவிட்டது. பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு ஏக்கருக்கு நஷ்ட ஈடாக 30 ஆயிரம் வழங்க வேண்டும் உள்பட பத்திற்கும் மேற்பட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.
பின்பு வட்டாட்சியர் சிவகுமாரிடம் கோரிக்கை மனுவினை அளித்தனர்.
இதில் 50க்கும் மேற்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments