வீடுவீடாகச் சென்று கொசு ஒழிப்பு பணியில் ஈடுபட அறிவுறுத்தல்
கோவை :
கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.74க்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் அலுவலகத்தில் சுகாதாரப் பணியாளர்களின் வருகைப்பதிவேடுகளை ஆய்வு செய்த ஆணையாளர் மாநகராட்சி கொசு ஒழிப்பு பணியாளர்கள் வீடுவீடாகச் சென்று அபேட் மருந்தை தொட்டிகளில் ஊற்றுவதையும், தேவையில்லாத பொருட்களை அகற்றும் பணிகளில் ஈடுபட்டு வருவதையும், பொது மக்கள் தேக்கி வைக்கப்பட்டுள்ள நீரில் கொசுப் புழுக்கள் உள்ளனவா என்பதை கண்டறியும் பணிகளில் ஈடுபடுமாறு சுகாதார பணியாளர்களுக்கு உத்தரவிட்டார்.
சிலதினங்களுக்கு முன்னர் பெய்த பேருந்து கனமழையினால் காந்திபுரம் நகர பேருந்து நிலையத்திலுள்ள மேற்கூரை இடிபாடுகளை சரிசெய்யும் பணியினையும்,மத்தியப் நிலையங்களில் பழுதாகியுள்ள இடிபாடுள்ள சுவர்களை ஆய்வு செய்து உடனடியாக சரிசெய்யுமாறு மாநகராட்சி பொறியாளர்களுக்கு உத்தரவிட்டார்.
தொடந்து, காந்திபுரம் நகரப்பேருந்து நிலையம் பி.3 காவல் நிலையம் அருகில் உள்ள நவீன கட்டண கழிப்பிடத்தில் மாநகராட்சி ஆணையாளர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டபோது, அக்கட்டண கழிப்பிடத்தில் நிர்ணயித்த கட்டணம் ரூ.1/-க்கு பதிலாக ரூ.5/- வசூலிக்கப்பட்டது கண்டறியப்பட்டதால். கழிப்பிடத்தின் குத்தகைதாரருக்கு ஏலநிபந்தனைகள் கடைபிடிக்காத காரணத்தினால், ஏல் நிபந்தனைகளை முழுமையாக கடைபிடிக்க எச்சரிக்கப்பட்டு, ரூ.5,000/- அபராதமாக விதிக்கப்பட்டு, எந்தவித முன்னறிவிப்பின்றி ஒப்பந்ததாரருக்கு வழங்கப்பட்ட ஒப்பந்த ஆணை ரத்து செய்யப்பட்டு அவரது பெயரினை கருப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டு இவ்வினத்தினை பொது ஏலத்தில் சேர்க்கப்படும் மாநகராட்சி ஆணையாளர் என ராஜ கோபால் சுன்கரா உத்தரவிட்டுள்ளார்கள்.
இந்த ஆய்வின்போது, உதவி செயற்பொறியாளர் பிரபாகரன், உதவி பொறியாளர்கள் குமரேசன், ஜெயின்ராஜ், ஏஞ்ஜலினா, சுகாதார ஆய்வாளர்கள் பவுன்ராஜ், சலைய்த் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.
No comments
Thank you for your comments