Breaking News

புதிய வேளாண்காடுகள் வளர்ப்புத் திட்டம்

கோவை, டிச.14-

விவசாயிகளின் வாழ்வை வளமாக்கும் 'தமிழ்நாடு விவசாய நிலங்களில் நீடித்த பசுமைப் போர்வைக்கான இயக்கம்' என்ற புதிய வேளாண்காடுகள் வளர்ப்புத் திட்டம் செயல்படுத்துதல்.

வேளான்மை மற்றும் உழவர் நலத் துறையின் தொண்டாமுத்தூர் வட்டார வேளான்மை உதவி இயக்குனர் ஷீலா பூசலட்சுமி வெளியிட்ட செய்தி குறிப்பில்...

நடப்பு 2021-22-ஆம் ஆண்டில் தமிழ்நாடு விவசாய நிலங்களில் நீடித்த பசுமைப் போர்வைக்கான இயக்கம்' என்ற புதிய வேளாண் காடுகள் வளர்ப்புத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

தொண்டாமுத்தூர் வட்டாரத்திற்க்குட்பட்ட 25 வருவாய் கிரமங்களில் நடப்பு 2021-22-ஆம் ஆண்டில் 27440 மரக்கன்றுகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு விவசாய நிலங்களின் வரப்புகளிலும் மற்றும் குறைந்த செறிவில் விவசாய நிலங்களிலும் நடவு செய்யப்பட்டு மரம் சார்ந்த விவசாயம் ஊக்குவிக்கப்படும்.


இத்திட்டத்தின் கீழ் தொண்டாமுத்தூர் வட்டாரத்திற்கு மகோகனி, மலை வேம்பு, ஈட்டி, வேங்கை, நாவல், பெருநெல்லி மற்றும் வேம்பு ஆகிய தரமான மரக்கன்றுகள் கோவை மாவட்ட தமிழ்நாடு அரசு வனத்துறையின் கீழ் உள்ள தொண்டாமுத்தூர் இருட்டுபள்ளம், மதுக்கரை-பிள்ளையார்புரம், வடகோவை மற்றும் மேட்டுப்பாளையம்-ஓடந்துறையில் உள்ள வன நாற்றங்கால்களில் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு வழங்குவதற்க்கு தயாராக உள்ளன. மரக்கன்று ஒன்றின் விலை ரூ.15/- ஆகும்.

விவசாயிகள் மரக்கன்றுகளைப் பெருவதற்காக அருகிலுள்ள வேளான்மை விரிவாக்க மையத்தில் சிட்டா, ஆதார், வங்கி புத்தக நகல் ஆகிய ஆவணங்களுடன் இணைய வழி மூலம் பதிவு செய்து வேளான்மை மற்றும் உழவர் நலத் துறையின் பரிந்துரை சீட்டின்படி மரக்கன்றுகளை, வன நாற்றங்காலிருந்து இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.

மரக்கன்றுகள் விநியோகம் வரப்பு நடவு முறை எனில் ஏக்கருக்கு 50 மரக்கன்றுகளுக்கு மிகாமலும், விவசாய நிலங்களில் நடவு செய்ய ஏக்கருக்கு 160 மரக்கன்றுகளுக்கு மிகாமலும் வழங்கப்படும்.மரக்கன்றுகளை பராமரித்திட பயனாளி விவசாயிகளுக்கு ஊக்கத்

தொகையாக 2-ஆம் ஆண்டு முதல் 4ஆம் ஆண்டு வரை உயிருடன் உள்ள மரக்கன்று ஒன்றுக்கு ஒவ்வொரு ஆண்டும் ரூ.7/- வீதம் மூன்று ஆண்டுகளுக்கு ரூ.21/- வழங்கப்படும்.

மரக்கன்றுகள் அனைத்தும் மழைநீரைப் பயன்படுத்தி டிசம்பர் மாத இறுதிக்குள் நடவு செய்திடவும், நடப்பட்ட மரக்கன்றுகள் வருவாய்த்துறையின் அடங்கல் பதிவேட்டில் பதிவு செய்திடவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இத்திட்டத்தில் விருப்பமுள்ள  அனைத்து விவசாயிகளும் சேர்ந்து பயன்பெறலாம். சிறுகுறு விவசாயிகள், பெண் விவசாயிகள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இன விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

No comments

Thank you for your comments