பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட 300க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கைது
காஞ்சிபுரம் :
காஞ்சிபுரத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட 300க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கைது...
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் பாண்டிச்சேரி தெலங்கானா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்குவதைப் போல் ரூ.ஆயிரத்திலிருந்து ரூ.3 ஆயிராமாகவும், கடும் ஊனமுற்றவர்களுக்கு ரூ.1500லிருந்து ரூ.5 ஆயிரமாக உயர்த்தி வழங்கிட வேண்டுமென்று முந்தைய அதிமுக அரசை பலமுறை வலியுறுத்தியும் எவ்வித நடவடிக்கைகள் மேற்கொள்ளாததால் தற்போது ஆட்சி பொறுப்பேற்று இருக்கும் திமுக அரசு இக்கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றிட வலியுறுத்தி இன்று தமிழகம் முழுவதும் சாலை மறியல் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
அதன் ஓர் பகுதியாக காஞ்சிபுரம் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் மாவட்ட தலைவர் முனுசாமி ,மாவட்ட பொருளாளர் பாலாஜி ஆகியோர் தலைமையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே காவலான் கேட் பகுதியில் ஆண்கள் பெண்கள் என 300க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோசங்களை எழுப்பியவாரு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் காஞ்சிபுரம்- வாந்தவாசி சாலையில் சுமார் அரை மணி நேரம் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
அதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் அனைவரையும் போலீசார் கைது செய்து வாகனங்கள் மூலம் தனியார் திருமண மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர்.
மாற்றுத்திறனாளிகளின் சாலை மறியல் போராட்டத்தினால் அப்பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்டது.
No comments
Thank you for your comments