Breaking News

கோவை மாவட்டம் அனைத்து அடிப்படை வசதிகளையும் பெற்ற சிறந்த மாவட்டமாக விளங்கிட நடவடிக்கை

கோயம்புத்தூர்

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி,  54 பயனாளிகளுக்கு ரூ.1.13கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 

அதனைத் தொடர்ந்து ஸ்வர்கா அறக்கட்டளை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட மாற்றுத்திறனாளிகள் பங்கேற்ற சிறப்பு மோட்டார் வாகன விழிப்புணர்வு பேரணியினை கொடியசைத்து தொடங்கி வைத்ததும், கோவை அவினாசி சாலை மேம்பாலத்தின் சுரங்கப்பாதையில் மழைநீர் போர்கால அடிப்படையில் சுத்தம் செய்யப்பட்டு வருவதை நோரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்டஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் மாநகர காவல் ஆணையர் பிரதீப்குமார் இ.கா.ப.,ராஜகோபால் சுன்கரா இ.ஆ.ப., மாநகராட்சி மாவட்ட ஆணையாளர் வருவாய் அலுவலர் ப்பி.எஸ்.லீலாஅலெக்ஸ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக், ஸ்வர்கா அறக்கட்டளை நிறுவனர்கள் குருபிரசாத், ஸ்வர்னலதா, மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர். 

அமைச்சர் வி.செந்தில்பாலாஜி செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது,

பொதுமக்களை நேரில் சந்தித்து அவர்களின் குறைகளை அறிந்து நிவர்த்தி செய்யும் வகையில் மாபெரும் மக்கள் சபை நிகழ்ச்சி கோவை  மாநகராட்சியின் 100 வார்டுகளிலும், நகராட்சி பேரூராட்சிகளில் 50 இடங்களிலும் என 150 இடங்களில் நடைபெற்றது. இதில் சுமார் 1.41 இலட்சம் மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டது. 

இம்மனுக்களில், சாலைவசதிகள், சாக்கடைவசதிகள், தெருவிளக்குகள் என அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இருக்கிறார்கள். 

அந்த கோரிக்கைகளை  முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு எடுத்துச் சென்று இருக்கின்றோம்.

கடந்த 22ஆம் தேதி  முதலமைச்சர் 25,514 பயனாளிகளுக்கு நலத்திட்டங்களை முதல் முறையாக ஒரே  நிகழ்வில்  வழங்கினார்கள். 

பெறப்பட்டுள்ள கோரிக்கை மனுக்களை ஆராய்ந்து, விதிமுறைகளுக்கு உட்பட்டு அரசின் நலத்திட்டங்களை வழங்க சிறப்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

இன்னும் யாருக்கெல்லாம் அரசு நலத்திட்ட உதவிகள் விடுபட்டுள்ளதோ, அவர்களுக்குகெல்லாம் முதலமைச்சர்  உத்தரவின்படி, விரைந்து நலத்திட்ட உதவிகள் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.



கோவை மாவட்டம், அனைத்து அடிப்படை வசதிகளையும் பெற்று சிறந்த மாவட்டமாக விளங்கிட முதலமைச்சர்  திட்டங்களை விரைவாக செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

கோவை மாவட்டத்தில் 45 நிமிடங்களில் ஏறத்தாழ 75மி.மி அளவு நேற்று பெய்த கனமழையால் சாலைகளில் மழைநீர் தேங்கியது. அதிலும், அவினாசிசாலை, இரயில்வேபாலம் ஆகிய இடங்களில் அதிக அளவில் மழைநீர் தேங்கியது.

இதனால் வாகனபோக்குவரத்து சிரமமாக இருந்தது. மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி போர்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளினால் போக்குவரத்திற்கு வழிவகை செய்யப்பட்டது. 

இன்னும் ஒருசில இடங்களில் மழைநீரைஅகற்றும் பணி நடைபெற்றுவருகிறது. விரைவில் சீரான போக்குவரத்துக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கோவை மாவட்டத்தில் மழையின் காரணமாக எந்தந்த  பகுதிகளில் பாதிப்பு ஏற்படுகிறது என்பதை கண்டறிந்து, அப்பாதிப்புகளுக்கான நீண்ட தீர்வு காண்பதற்கான ஆய்வு பணிகள் நடைபெற்றுவருகிறது. 

மழைநீரால் பாதிக்கப்பட்ட சாலைகள்,  பாதாள் சாக்கடைதிட்டத்தால்  சீரமைக்கப்படாதசாலைகள் என மொத்தம் 289 சாலைப் பணிகளுக்கு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன என   அமைச்சர் தெரிவித்தார்.

வருவாய் பேரிடர் மேலாண்மைத்துறை மூலம் சாலை விபத்து நிவாரண  நிதியாக ரூ.19.50 இலட்சம் மதிப்பில் 20 பயனாளிகளுக்கும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் இணைப்புசக்கரம் பொருத்தப்பட்ட ஸ்கூட்டர் ரூ.1.53 இலட்சம் மதிப்பில் 2  பயனாளிகளுக்கும், விலையில்லா சலவை பெட்டி ரூ.9000/-, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் மூலம் மின்னணுகுடும்ப அட்டை 10 பயனாளிகளுக்கும், மாவட்ட தொழில்மையம் ரூ.86.76 இலட்சம் மதிப்பில் நலத்திட்டஉதவிகள் 4 பயனாளிகளுக்கும், சமூகபாதுகாப்புதிட்டத்தின் மூலம் ரூ.1.68 இலட்சம் மதிப்பில் ஓய்வூதியம் 14பயனாளிகளுக்கும், ரூ.4இலட்சம் மதிப்பில் இலவசவீட்டு மனைப்பட்டா 2 பயனாளிகளுக்கு என மொத்தம் 54பயனாளிகளுக்கு ரூ.113.56 இலட்சம் மதிப்பில் அரசுநலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார்.

No comments

Thank you for your comments