13-ஆம் கட்ட கொரோனா தடுப்பூசி முகாம்... ஆட்சியர் ஸ்ரேயா பி. சிங் நேரில் ஆய்வு
நாமக்கல் :
நாமக்கல் மாவட்டத்தில் 13-ஆம் கட்ட கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் ஸ்ரேயா பி. சிங் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை நடைபெற்ற 12 மாபெரும் தடுப்பூசி முகாம்களில் 4,74,471 பேர் தடுப்பூசி செலுத்தி பயன்பெற்றனர். அதேபோல் 04.12.2021ம் தேதி அன்று 13ம் கட்டமாக அனைத்து ஊராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் நகராட்சிகள் ஆகிய பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகள் ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், ஊட்டச்சத்து மையங்கள் மற்றும் அரசு தொடக்க மற்றும் நடு நிலைப்பள்ளிகளில் உள்ள 472 நிலையான முகாம்கள் மூலமாகவும் 41 நடமாடும் குழுக்கள் மூலமாகம் ஆகமொத்தம் 513 முகாம்களில் காலை 7 மணி முதல் இரவு 7 மணிவரை கொரோனா நோய் ”மெகாதடுப்பூசி முகாம்” நடைபெற்றன. இம்முகாம் பணிகளில் 210 மருத்துவர்கள், 430 செவிலியர்கள், 1600 அங்கன்வாடி பணியாளர்கள், 1400 தன்னார்வலர்கள், 415 பயிற்சி செவிலியர்கள் மற்றும் 265 பயிற்சி சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் 1400 ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.
மேலும் இந்த மெகா தடுப்பூசி முகாமில் பொதுமக்கள் கலந்து கொள்வதற்காக தொலைக்காட்சிகள், பத்திரிக்கைகள், சமூக வலைதளங்கள் மூலமாக முதியோர்கள், இளைஞர்கள், வணிகர்கள் தடுப்பூசி போடுவதன் அவசியத்தை உணர்த்தும் குறும்படங்கள், செய்திகள் வெளியிடப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
4.12.2021ம் தேதி அன்று நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றியம் எஸ்.நாட்டாமங்கலம்; ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஸ்ரேயா பி. சிங் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த நிகழ்வின்போது புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சரவணன், வனிதா உட்பட சுகாதார மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள், செவிலியர்கள், அரசுத்துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments