குழாய் உடைந்து சாலையில் வீணாக ஓடும் குடிநீர்
கோவை, டிச.12-
கோவை வெள்ளக்கிணறு பிரிவு-ஜி.என் மில்ஸ் இடையில், மேட்டுப்பாளையம் சாலையில் கடந்த 10 நாட்களாக குழாயில் உடைப்பு ஏற்பட்டு சாலையில் குடிநீர் வீணாக ஓடுகிறது. சாலை முழுவதும் குடிநீர் தேங்கி நிற்பதால் கொசு புழுக்கல் உற்பத்தி ஆகிறது. அதுமட்டுமின்றி, தேங்கிய குடிநீரால் சாலையும் சேறும் சகதியுமாக மாறிவருகிறது.
குடிநீர் தார்சாலையில் வழிநெடிகிலும் ஓடுவதால், வாகனங்கள் கடந்து செல்ல மிகவும் சிரமமாக உள்ளது. மேலும், கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது என வாகன ஓட்டிகள் இடையே குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சாலையில் ஓடும் தண்ணீரால் வழுக்கி விழுந்து விபத்து ஏற்படும் பேராபத்தும் உள்ளது என்று வாகன ஓட்டிகள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
மேம்பாலம் கட்டுமான பணிகளும் நடைபெற்று வருவதால், போக்குவரத்து நெரிசல் அதிகம் ஏற்படுகிறது. குறிப்பாக ஆம்புலன்ஸ் வாகனங்கள் சாலையை கடந்து செல்ல சிரமப்படுகின்றன.
உடைப்பு ஏற்பட்டுள்ள குழாயை, அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சீரமைக்கவேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் உடைப்புகளால் தண்ணீர் வீணாகிறது, உடைப்புகளை சரி செய்து முறையாக பராமரித்தால் தண்ணீர் வீணாகாமல் பொதுமக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என சமூக ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.
Post Comment
No comments
Thank you for your comments