Breaking News

பாப்பிரெட்டிப்பட்டி மருத்துவமனையில் 24 மணிநேர மருத்துவ வசதி தேவை என பொதுமக்கள் கோரிக்கை

தருமபுரி: 

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் சுமார் இரண்டு லட்சத்திற்கும்  மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் வாழும் மக்களுக்கு அவசரமான சிகிச்சைக்கு சரியான மருத்துவ வசதிகள் பாப்பிரெட்டிப்பட்டி மருத்துவமனையில் கிடையாது. 

குறிப்பாக மாரடைப்பு வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தகுதி வாய்ந்த மருத்துவர்கள் இல்லாத நிலையில் நோயாளிகள் சிகிச்சைக்காக  சேலம்  செல்லும் வழியில் இறந்து போகின்றனர். 

இதனை கருத்தில் கொண்டு  24 மணிநேர அவசர சிகிச்சைக்கான மருத்துவ வசதிகளை மேம்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

இந்நிலையில், மக்களின் இந்த கோரிகையை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் கொண்டு சென்று மக்களுக்கான மருத்துவ வசதிகளை கூடிய விரைவில் உருவாக்கப்படும் என திமுக பிரமுகர் மெடிக்கல் சத்தியமூர்த்தி  நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

No comments

Thank you for your comments