Breaking News

உதயநிதி மக்கள் சேவை மையம் திறப்பு

கோவை:

தமிழ்நாடு முதலமைச்சர் - கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, கோவை மாநகர் மேற்கு மாவட்டம், கவுண்டம்பாளையம் பகுதி கழகத்திற்கு உட்பட்ட, புதிய வார்டு எண் 17ல் கழகப் பணியாற்றி வரும்  ஜே.எஸ்.சரத் ஏற்பாட்டில், சக்தி கார்டன் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள உதயநிதி மக்கள் சேவை மையத்தினை கோவை மேற்கு மாவட்ட கழக பொறுப்பாளர் பையா கவுண்டர் எ.ஆர்.கிருஷ்ணன் திறந்து வைத்தார். 

இந்நிகழ்ச்சியில் கவுண்டம்பாளையம் பகுதி கழகப் பொறுப்பாளர், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள், பகுதி பொறுப்புக்குழு உறுப்பினர்கள், வட்ட கழகச் செயலாளர்கள், மாவட்ட அணி அமைப்பாளர்கள் - துணை அமைப்பாளர்கள், வட்டக் கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



No comments

Thank you for your comments