பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு உதவி ஆய்வாளர்களுக்கு செயல்பாடுகள் விளக்கம் கூட்டம்
கோவை:
கோவை மாவட்டம் காவல்துறை தலைமை இயக்குனர் டாக்டர் சைலேந்திரபாபு உத்தரவின் பேரில், மேற்கு மண்டல காவல்துறைத் தலைவர் சுதாகர் மற்றும் கோவை சரக காவல்துறை துணைத் தலைவர் டாக்டர் முத்துச்சாமி வழிகாட்டுதலின் பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் தலைமையில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திருமதி. சுகாசினி முன்னிலையில் மாவட்ட காவல் அலுவலகத்தில் ஒவ்வொரு காவல் நிலையத்திலும் Child Welfare Police Officer -ஆக நியமனம் செய்யப்பட்டுள்ள உதவி ஆய்வாளர்களுக்கு அவர்களது அலுவல்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து அறிவுரை வழங்கப்பட்டது.
காவல் நிலையங்களில் உள்ள குழந்தைகள் நல அலுவலர்கள் மற்றும் காவல் அதிகாரிகள்/ஆளிநர்கள் குழந்தைகள் நலனுக்காக ஏற்படுத்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை கண்காணித்தல், குழந்தைகள் சம்பந்தபட்ட குற்ற வழக்குகளை கண்காணிப்பது மற்றும் வழக்குகளை விரைந்து முடிப்பதற்கு நடவடிக்கைகள்,
மாவட்டத்தில் இயங்கி வரும் துளிர் மையத்தின் மூலம் குற்ற வழக்குகளில் தொடர்புடைய குழந்தைகளுக்கு மறுவாழ்வு ஏற்படுத்துதல், வேலைவாய்ப்பு அமைத்துக் கொடுத்தல் மேலும் படிப்பதற்கு வழிவகை செய்து கொடுத்தல் மற்றும் அவர்களின் நல் வாழ்விற்கு வேண்டிய உதவிகளைச் செய்தல் .
பள்ளி மற்றும் கல்லூரிகளில் விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்துதல் அதில் மாணவர் மற்றும் மாணவிகளுக்கு பாதுகாப்பு குறித்தும், பகடிவதை (ராக்கிங்) தடுப்பு சம்பந்தமாகவும், போதைப்பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்தும் மற்றும் போதை வஸ்துகளினால் ஏற்படும் தீமைகள் குறித்தும் விளக்கிக் கூறுதல்,
பள்ளி மற்றும் கல்லூரி வளாகத்திற்கு 100 மீட்டர் வட்டத்திற்குள் ஏதேனும் போதை / புகை பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றனவா என்பதை கண்காணித்தல், அவ்வாறு இருப்பின் அக்குற்றம் புரிபவர்கள் மீது சட்டரீதியாக கடும் நடவடிக்கை எடுத்தல்,
பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்கள் மருத்துவரின் பரிந்துரை சான்று இல்லாமல் எவ்வித மருந்துகளும் வழங்கக்கூடாது எனவும், குறிப்பாக குழந்தைகளுக்கு போதை தரக்கூடிய மருந்துகளை வழங்கக்கூடாது என மருந்து கடை உரிமையாளர்களுக்கு கலந்தாய்வுக் கூட்டம் நடத்தி அறிவுரை வழங்குதல்,
மாவட்டத்தில் 10 காவல் நிலையங்களில் சிறுவர் மற்றும் சிறுமியர் மன்றம் செயல்பட்டு வருகிறது. அவற்றின் மூலம் அப்பகுதியில் உள்ள சிறுவர் மற்றும் சிறுமியரின் படிப்பு, விளையாட்டு, உடற்பயிற்சிகள், தற்காப்பு போன்றவற்றை பயிற்சி வழங்குதல் மேலும் மற்ற காவல் நிலையங்களிலும் சிறுவர் மற்றும் சிறுவர் மன்றம் அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் அப்பகுதியில் உள்ள குடிசைவாழ் மக்கள் மற்றும் ஏழ்மை நிலையில் உள்ள குழந்தைகளுக்கு படிப்பு, விளையாட்டு, உடற்பயிற்சி மற்றும் தற்காப்பு போன்றவற்றை கற்று தர வேண்டும் என தெரிவித்தார்.
மேலும் குழந்தைகள் எதேனும் குற்ற சம்பவங்களை புரிந்து அவர்களது மனநிலை பாதிக்கப்பட்டு இருந்தாலோ அல்லது மன அழுத்தத்தில் இருந்தாலோ மாவட்டத்தில் இயங்கி வரும் விடியல் மையத்தின் மூலம் அவர்களுக்கு அறிவுரை வழங்கி அவர்களை நல்வழிப்படுத்த காவல்துறை அழைக்க வேண்டிய தொலைபேசி எண்கள். 0422 -2200999.
No comments
Thank you for your comments