கோவை மாவட்டம் கூடைப்பந்து கழகம் மற்றும் ஜாசா கூடைப்பந்து கழகம் சார்பில் கூடைபந்து போட்டி...
கோவை:
கோவை மாவட்டம் கூடைப்பந்து கழகம் மற்றும் ஜாசா கூடைப்பந்து கழகம் சார்பில் 16 வயதுக்கு உட்பட்ட மாணவ, மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டி, நேரு ஸ்டேடியம் எதிரே உள்ள மாநகராட்சி கூடைப்பந்து மைதானத்தில் நடைபெற்றது..
இதில், 26 அணிகள் பங்கேற்றன. போட்டிகள் அனைத்தும் 'நாக்-அவுட்' முறையில் நடந்தது.
முதல் அரை இறுதிப்போட்டியில் ஆர்.கே.எஸ்., பள்ளி அணி, 66-48 என்ற புள்ளி கணக்கில், ஒய்.எம்.சி.ஏ., கிளப் அணியையும்;
இரண்டாம் போட்டியில், ஆர்.எல்.எம்.எச். எஸ்., அணி, 72-62 என்ற புள்ளி கணக்கில், யங்பிளட் பொள்ளாச்சி அணியையும் வென்றன.
அதனைத் தொடர்ந்து முதல் அரை இறுதிப்போட்டியில் அல்வேர்னியா அணி, 67-33 என்ற புள்ளி கணக்கில், ஒய்.எம்.சி.ஏ., அணியையும்,
2வது போட்டியில், சி.சி.எம்.ஏ., அணி, 40-12 என்ற புள்ளி கணக்கில், காரமடை எஸ்.வி.ஜி.வி., அணியையும் வென்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றன.
அதனை தொடர்ந்து அல்வேர்னியாவும், சி.சி.எம்.ஏ.,வும் இறுதி போட்டியில் மோதினர். இதில் சி.சிஎம்.ஏ அணி 69-32 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
ஆண்களுக்குகான இறுதிப் போட்டியில் ராஜலட்சுமி அணியை, ஆர்.கே.எஸ்., அணி வெற்றி பெற்றது.
No comments
Thank you for your comments