Breaking News

அடிப்படை தேவைகளுக்கு அல்லல்படும் அப்பாவி மக்கள்... பொதுக் கழிப்பிடத்தை சீரமைக்க வலுக்கும் கோரிக்கை

கோயம்புத்தூர், டிச.23-

கோயம்புத்தூர் மாவட்டம் மதுக்கரை ஒன்றியம் ஒத்தக்கால் மண்டபம் பேரூராட்சிக்குட்பட்ட பல்லடம் சாலையில் அமைந்துள்ள ஒக்கிலிபாளையம் பொது கழிப்பிடம் ரூ.5,88,000 மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது. 

உரிய பராமரிப்பு இல்லாததால் பொதுக் கழிப்பிடத்தை, பொதுமக்கள் பயன்படுத்த முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி அதிகமான துர்நாற்றம் வீசுவதால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மிகவும் அவதியுறுகின்றனர். இதனால் காற்று வழியாக தொற்று நோய் ஏற்படும் அபாயமும் உள்ளது. 

எனவே பொதுக் கழிப்பிடத்தை சீரமைத்து பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் வழிவகை செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். 

ஆக மொத்தத்தில்

மக்களின் வரிப்பணமோ பாழ்..

அரசு திட்டமோ வீண்...

இவர்களின் குரலுக்கு செவிமடுப்பார்களா அதிகாரிகள்... அடிப்படை தேவையான கோரிக்கையை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்குமா நிர்வாகம்... 

பொறுத்திருந்து பார்ப்போம்.. 

காலச்சக்கரம் சுழற்சியில்...

No comments

Thank you for your comments