Breaking News

தடையை மீறி பாரதியார் பல்கலைக்கழகத்தின் முன்பு பாஜகவினர் ஆர்ப்பாட்டம்

கோவை:

கோவை பாரதியார்  பல்கலைக்கழகத்தின் முன்பு பல்கலைக்கழக துணைவேந்தர் காளிராஜை கண்டித்தும் கேரளாவில் பாரதிய ஜனதா நிர்வாகி படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும் இந்து முன்னணி மாநில பொதுச்செயலாளர் கிஷோர் குமார் மற்றும் பாரதிய ஜனதா கட்சி முன்னாள் தேசிய செயலாளர் ஹெச். ராஜா தலைமையில் தடையை மீறி 500க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

இதுகுறித்து ஹெச். ராஜா தெரிவிக்கையில்,  

பெண்ணுரிமை என்ற பெயரில் சுப. வீரபாண்டியன் கலந்தாய்வுக் கூட்டம் நடத்தியது கண்டிக்கத்தக்கது. மேலும் இந்த கூட்டத்தில் துணைவேந்தர் காளிராஜ் மனதார கருப்பு சட்டை அணிந்துள்ளேன் என்று கூறியது  வன்மையாக கண்டிக்கத்தக்கது. 


பல்கலைக்கழக வளாகத்திற்குள் ஒரு சார்பாக கூட்டம் நடத்துவது மதவெறியை தூண்டுவதாக உள்ளது. எனவே இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்தால் இந்து அமைப்புகள் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தும். மேலும் நடைபெற்ற  சம்பவங்களுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் ராஜினாமா செய்ய வேண்டும் என்று தெரிவித்தார். 

ஆர்ப்பாட்டத்தில் பாரதிய ஜனதா மாவட்ட தலைவர் நந்தகுமார் இந்துமுன்னணி கோட்ட செயலாளர் சதீஷ் மாவட்ட தலைவர் தசரதன் கிருஷ்ணன் சி.தனபால், விஷ்ணு ராஜா மற்றும் 500க்கும் மேற்பட்டடோர் கலந்து கொண்டனர். 

தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடைபெற்றதால் பாதுகாப்பிற்கு இருந்த போலீசார் எச். ராஜா உள்ளிட்ட அனைவரையும் கைது செய்யப்பட்டு அருகில் இருந்த  மண்டபத்தில் தங்கவைத்தனர்.

No comments

Thank you for your comments