இன்று இரவு பொது இடங்களில், கேளிக்கை விடுதிகளில் புத்தாண்டு கொண்டாட தடை
கோவை மாவட்டத்தில் உணவகங்கள், தங்கும் விடுதிகள், கேளிக்கை விடுதிகள், சாலைகள் மற்றும் இதர இடங்களில் (31-12 2021)அன்று இரவு நடத்தப்படும் 2022ஆம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு விழா கொண்டாட்டங்களுக்கு அனுமதி இல்லை என மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது
கொரோனா நோய் தொற்று பரவும் அபாயம் இருப்பதால் மாவட்டத்தில் 2022ஆம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு விழா கொண்டாட்டங்களில் சாலைகள், பூங்காக்கள், போன்ற பொது இடங்கள் மற்றும் தனியாருக்கு சொந்தமான உணவகங்கள் தங்கும் விடுதிகள், கேளிக்கை விடுதிகள் இதுபோன்ற இதர இடங்களில் (31-12-2021) அன்று இரவு பொதுவாக நடத்தப்படும் .
ஆங்கில புத்தாண்டு விழா கொண்டாட்டங்களில் பொதுமக்கள் பங்கேற்பதை தவிர்க்க வேண்டும். கூட்டம் கூடி புத்தாண்டு கொண்டாட்டங்கள் செய்யும் பட்சத்தில் தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ள கொரோனா நோய்த் தொற்றானது அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
மேலும் சில வெளிநாடுகளில் இருந்து வரும் நபர்கள் மூலம் நோய்த் தொற்றானது தற்போது மீண்டும் பரவி வருகின்ற சூழ்நிலையில் நோய்த்தடுப்பு பணிகளை மேலும் கட்டுப்படுத்த வேண்டியது அவசியமாகிறது.
எனவே மாவட்டத்தில் உணவகங்கள், தங்கும் விடுதிகள், கேளிக்கை விடுதிகள், சாலைகள் மற்றும் இதர இடங்களில் (31-12 2021)அன்று இரவு நடத்தப்படும் 2022ஆம் ஆண்டு ஆங்கில புத்தாண்டுவிழா கொண்டாட்டங்களுக்கு அனுமதி இல்லை எனவும், மேற்படி நடைமுறைகள் விதிமுறைகளை மீறுபவர்கள் மீது பேரிடர் மேலாண்மை சட்டம் 2005 இன் கீழ் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments
Thank you for your comments