மீண்டும் தொடர் கனமழை... பொதுமக்கள் அச்சம்...
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
தமிழகத்தில் வானிலை மாற்றம் காரணமாக வரும் இரு நாட்களுக்கு சென்னை , காஞ்சிபுரம், திருவள்ளூர் , செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை பெய்யும் என சென்னை வானிலை மண்டல ஆய்வு மையம் அறிவித்தது.
இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று இரவு முதல் காஞ்சிபுரம் , உத்திரமேரூர் , வாலாஜாபாத் உள்ளிட்ட பல பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருகிறது.
காலை 8மணிக்கு மேல் மழை நின்ற நிலையில் கடந்த 2 மணி நேரமாக மீண்டும் கனமழை பெய்து வருகிறது.
மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் மீண்டும் தொடர் மழை காரணமாக பொதுமக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.
இருப்பினும் மாவட்ட நிர்வாகம் அனைத்து பகுதி வருவாய் அலுவலர்களும் அவர்களுக்குரிய பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வர அறிவுறுத்தியுள்ளது.
மேலும் தேவை ஏற்படின் நீர் நிலைகளின் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து தொடர்ந்து வந்து கொண்டிருப்பதால் அதை தீவிரமாக கண்காணிக்க பொதுப்பணித்துறை அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது
No comments
Thank you for your comments