சட்டத்திற்கு விரோதமாக ரேஷஷன் அரிசி கடத்த முயன்றவர்கள் கைது.
கோவை:
கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் இ.கா.ப., அவர்களுக்கு பொள்ளாட்சி தாலுக்கா காவல் நிலைய எல்லைப் பகுதியில் ரேஷன் அரிசியை கடத்துவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் பொள்ளாச்சி தாலுகா காவல் நிலைய உதவி ஆய்வாளர் நாகராஜ் மற்றும் தனிப்படை காவல் குழுவினருடன் சம்பவ இடமான பொள்ளாச்சி திம்மங்குது ,
செட்டிமுத்து ரோடு பகுதிக்கு விரைந்து சென்று பார்த்தபோது சட்டத்திற்கு விரோதமாக ரேஷன் அரிசியை 5 இருசக்கர வாகனத்தில் 17 சாக்கு மூட்டையில் சுமார் 700 கிலோ எடையுள்ள ரேஷன் அரிசியை கடத்த முயன்ற பொள்ளாச்சி குப்புச்சாமி வீதியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் (60) அவரது மனைவி பத்மாவதி(50) அதே வீதியைச் சேர்ந்த நாகராஜன் மகன் குமரன்(48), குமரன் நகரைச் சேர்ந்த பாலமுருகன் மகன் தானு(16),ராஜா மில் ரோட்டை சேர்ந்த கிரி மகன் தனசேகரன்(28),கேரளா மாநிலம் சித்தூரை சேர்ந்த நாகராஜ் மகன் ராமகிருஷ்ணன்(37),மற்றும் கேரளா நடராஜ் கவுண்டர் காலனியை சேர்ந்த ஜெயா என்பவரின் மகன் தீபக்(21) ஆகிய 7 நபர்களையும் கைது செய்தும் அவர்கள் கடத்த முயன்ற 700 கிலோ ரேஷன் அரிசி மற்றும் ரேஷன் அரிசியை கடத்த பயன்படுத்திய இருசக்கர வாகனம்-5 ஆகியவற்றை பறிமுதல் செய்து குடிமைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் வசம் ஒப்படைக்கப்பட்டது.
சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.

No comments
Thank you for your comments