குறைதீர் கூட்டத்தை பயன்படுத்திக்கொள்ள பொதுமக்களுக்கு மாநகராட்சி ஆணையர் அறிவுறுத்தல்
கோயம்புத்தூர்:
கோவை மாநகராட்சி சார்பில் நடைபெறும் சிறப்பு குறைதீர் கூட்டத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என பொதுமக்களுக்கு ஆணையர் ராஜகோபால் சுன்கரா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் நடைபெற்ற சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை 18 நபர்கள் அளித்தனர்.
இதில் சொத்துவரி விதிப்பு, காலியிட வரிவிதிப்பு, சொத்துவரி பெயர் மாற்றம், தொழில் வரி விதித்தல், தொழில் உரிமம் வழங்குதல், பாதாள சாக்கடை இணைப்பு வழங்குதல் மற்றும் சாலை வசதி, மின்விளக்குகள், குடிநீர் வசதி, சுகாதாரம் போன்ற அடிப்படை வசதிகள் குறித்தும் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை அளித்தனர்.
இன்றைய மக்கள் குறைதீர் கூட்டத்தில் நகரமைப்பு பிரிவிற்கு 6 மனுக்களும், வருவாய் பிரிவிற்கு 4 மனுக்களும், மாநகராட்சி பொறியியல் பிரிவிற்கு 5 மனுக்களும், கணக்கு பிரிவிற்கு 1 மனுவும், பொது சுகாதாரப் பிரிவிற்கு 1 மனுவும், பொது பிரிவிற்கு 1 மனுவும் என மொத்தம் 18 மனுக்கள் பெறப்பட்டது.
இக்கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்ட மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் இம்மனுக்களின் மீது துறை ரீதியாக தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட மண்டல உதவி ஆணையர் மற்றும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்கள்.
மேற்கொள்ளப்படும் எனவும் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்கள்.
இக்கூட்டத்தில் கிழக்கு மண்டல உதவி ஆணையர் செந்தில்குமார் ரத்தினம், மாநகராட்சி அனைத்து அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.


No comments
Thank you for your comments