காதல் ஜோடி நீதிமன்றத்தில் ஆஜர்
தருமபுரி
தருமபுரி மாவட்டம் கம்பைநல்லூர் அருகேயுள்ள கொங்கரப்பட்டி பழத்தோட்டத்தை சேர்ந்த சரவணன், மகள் சுவேதா (19), குமாரபாளையத்தில் உள்ள தனியார் கல்லுாரியில், பி.எஸ்.சி., முதலாமாண்டு படித்து வந்த நிலையில் கடந்த 29ம் தேதி அதிகாலை, 4:00 மணிக்கு வீட்டில் இருந்த சுவேதாவை காணவில்லை.
உறவினர் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. என்று தனது மகளை கொண்ரம்பட்டியை சேர்ந்த விஜி (20), என்பவர் அழைத்து சென்றதாக சரவணன் அளித்த புகாரில் கம்பைநல்லுார் காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்ட நிலையில் நேற்று தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் காதல் ஜோடியினர் தஞ்சம் புகுந்த நிலையில் விசாரணை பிறகு அவர்களை கம்பைநல்லூர் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்நிலையில் பிரச்சினைகள் எதுவும் ஏற்படாத வகையில் அரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு முழுமையான விசாரணை மேற்கொண்ட பிறகு சரவணனின் மகள் தனது கணவருடன் செல்வதாக உறுதிமொழி அளிக்கப்பட்ட நிலையில் காவல்துறையினர் அவர்களை பாதுகாப்புடன் வாகனத்தில் ஏற்றி சென்றனர்.
காதல் ஜோடியினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதால் கம்பைநல்லூர் காவல் ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையில் சுமார் 30-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதனால் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது
No comments
Thank you for your comments