கேரள-தமிழக எல்லை சோதனை சாவடியில் பறவைக்காய்ச்சல் தடுப்புப்பணிகள்
கோவை:
பறவைக்காய்ச்சல் தடுப்பு பணிகள் தொடர்பாக வாளையார் சோதனை சாவடியில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
கேரளா மாநில எல்லையான வாளையார் சோதனை சாவடியில் பறவைக்காய்ச்சல் தடுப்புப்பணிகள் தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் சமீரன், நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இவ்வாய்வின்போது கால்நடைபராமரிப்பு துறை துணை இயக்குநர் மரு.பெருமாள்சாமி மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்,
கோயம்புத்தூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த அரசு வழிகாட்டுதலின்படி, பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதன் அடிப்படையில் தற்போது கொரோனா தொற்று பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் அண்டை மாநிலமான கேரளா மாநிலத்திலிருந்து, அவசியத்தின் அடிப்படையில் வருபவர்கள், வணிகத்திற்காகவும், மருத்துவத்திற்காகவும், கோவை மாவட்டத்திற்கு வரும் அனைவரும், 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட RTPCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட கோவிட்யின்மை சான்று அல்லது கொரோனா தடுப்பூசி(இரண்டு தவணை) செலுத்தப்பட்டதற்கான சான்று கண்டிப்பாக உடன் வைத்திருப்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள்.
சோதனைச்சாவடிகளின் வழியாக கோவை மாவட்டத்திற்குள் வருபவர்களில் RTPCR பரிசோதனை செய்து கோவிட்யின்மை சான்று வைத்துள்ளவர்கள் எண்ணிக்கை குறைவாகவும், இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ்கள் வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை கூடுதலாக உள்ளது.
மேலும், ஒமிக்ரான் மற்றும் பறவைக்காய்ச்சல் போன்ற தொற்றுக்கள் பரவலை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கேரளா மாநிலத்தின் எல்லைப்பகுதிகளான கோவை மாவட்டத்தின் ஆணைகட்டி, வாளையார், வேலந்தாவளம், மேல்பாவி, முள்ளி, மீனாட்சிபுரம், கோபாலபுரம், செமனாம்பதி, வீரப்பகவுண்டன்புதூர், நடுப்புணி, ஜமீன்காளியாபுரம், வடக்காடு, உள்ளிட்ட சோதனை சாவடிகளில் சுகாதாரத்துறை, வருவாய்துறை மற்றும் காவல்துறை, உள்ளாட்சி துறை ஆகிய துறைகள் மூலம் தீவிர கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
24 மணிநேரமும் சுழற்சி முறையில் பணியாற்றும் வகையில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுக்களை கண்காணிக்க துணை ஆட்சியர் நிலையில் ஒரு அலுவலரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பில் கூடுதலாக ஒரு சோதனை சாவடி அமைக்கப்பட்டு, கால்நடைகள், கால்நடை தீவனங்களை கொண்டு செல்லும் வாகனங்களை கண்காணிக்கும் பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
🔥 முக்கியச் செய்திகள்
👌 லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் கணக்கில் வராத பணம், கிலோ கணக்கில் தங்கம் வெள்ளி பறிமுதல்
👌 மீண்டும் ஓர் அதிசய கிணறு... ஆர்வமுடன் பார்த்துச் செல்லும் பொதுமக்கள்
👌 போதையில் ஆம்புலன்ஸ் மீது ஏறி குத்தாட்டம்.!
👌 முதல்வர் ஸ்டாலினின் எதிர்கால திட்டங்கள் என்ன...? தெலங்கானா முதல்வர் சந்திப்பின் பின்னணி என்ன..?👌 கருணாநிதியை விட ஸ்டாலின் பயங்கரமானவர்... முதலமைச்சர் ஸ்டாலினை சீண்டும் ஹெச்.ராஜா..
கோவை மாவட்டத்தில் கோழிப்பண்ணைகள், புறக்கடை கோழிப்பண்ணைகள் மொத்தம் 1203 உள்ளன. கோழிப்பண்ணைகளில் உள்ள கோழிகளில் அசாதாரண இறப்பு அல்லது பறவை காய்ச்சல் நோய் அறிகுறிகள் ஏதும் தென்பட்டால் உடனடியாக அருகில் உள்ள கால்நடை மருத்துவர்களை அணுகி தகவல் அளிக்கவேண்டும்.
பறவைக்காய்ச்சல் தொடர்பாக கண்காணிப்புப்பணிகள் அனைத்து பகுதிகளிலும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. பறவைக்காய்ச்சல் நோயினை தீவரமாக கண்காணிப்பதற்க்கும், நோய் கிளர்ச்சியை கையாளுவதற்கும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள ஒருங்கிணைப்புகுழு அமைக்கப்பட்டு தொடர் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., தெரிவித்தார்.
No comments
Thank you for your comments