Breaking News

நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு ஆட்சியர் ஆய்வு...

கோவை:

நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு வாக்கு எண்ணும் மையமான தொழில்நுட்ப கல்லூரியில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப.,  நேரில்  பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது மாநகராட்சி  துணை ஆணையாளர் ஷர்மிளா மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

எதிர்வரும், நகர்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாட்டு பணிகள் தொடர்பாக கோவை மாவட்ட, வாக்கு எண்ணும் மையமான அரசு தொழில்நுட்ப கல்லூரியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

வாக்கு எண்ணும் மையத்தில், வாக்குப்பெட்டிகள் பாதுகாப்பு அறை, வாக்கு எண்ணும் அறை, வாக்கு எண்ணிகையின்போது வேட்பாளர்களின் முகவர்கள் உரிய வழியில் சென்று வர ஏதுவாக தடுப்புகள் அமைப்பது, பாதுகாப்பு ஏற்பாடுகள், குடிநீர், கழிப்பிடம், மின்சாரவசதி ஆகிய வசதிகள் உரிய முறையில் மேற்கொள்ள அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர்  உத்தரவிட்டார்.



No comments

Thank you for your comments