Breaking News

உரம் பதுக்கினால் உரிமம் ரத்து..! - ஆட்சியா் எச்சரிக்கை

நாமக்கல், டிச.17-

நாமக்கல் மாவட்டத்தில் உரங்களை பதுக்குவதோ  கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதோ   கண்டறியப்பட்டால் உரிமம் ரத்து செய்யப்படும் என மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயாசிங் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டடுள்ள செய்திக் குறிப்பில்...  

நாமக்கல் மாவட்டத்தில் விவசாய பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படும் மானிய விலை உரமான பொட்டாஷ் உரத்தின் விலை டிசம்பர்.8 முதல் ஒரு மூட்டையின் விலை (50கிலோ) ரூ.1,040-இல் இருந்து ரூ.1,700 ஆக உயா்த்தப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் இருப்பில் உள்ள பழைய பொட்டாஷ் உரத்தினை உர விற்பனையாளா்கள் பழைய விலைக்கே (ரூ.1040) விற்பனை செய்ய வேண்டும்.

அரசு நிா்ணயித்த விலையைவிட அதிக விலைக்கு விற்பனை செய்தால் விற்பனை செய்த உர விற்பனையாளரின் உரிமம் உடனடியாக ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், உரம் பதுக்குதல், விவசாயம் அல்லாத பயன்பாட்டுக்கு விற்பனை செய்தல் போன்ற செயல்களில் ஈடுபட்டாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

அனைத்து உர விற்பனையாளா்களும் உரங்களின் விலை விவரத்தை விவசாயிகளுக்கு தெரியும்படி விலை விவர பலகையில் எழுதிட வேண்டும். மேலும், உரம் வாங்கும் விவசாயிகள் மூட்டையில் குறிப்பிட்டுள்ள விலைக்கே கேட்டு வாங்க வேண்டும், 

தாங்கள் பயிரிட்டுள்ள பயிா் மற்றும் நிலத்தின் அளவிற்கேற்ப மட்டுமே உரங்கள் வாங்க வேண்டும். 

நாமக்கல் மாவட்ட விவசாயிகள் உரம் சம்பந்தப்பட்ட புகாா்களுக்கு அந்தந்த வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் அல்லது வேளாண்மை அலுவலரைத் தொடா்பு கொள்ளலாம்... என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Thank you for your comments