கோவையில் 93.6 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன...
தமிழகத்தில் கோவிட்-19 தடுப்பூசி செலுத்தும் பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. கோவை மாவட்டத்தில் 18 வயதிற்கு மேற்பட்ட 26.11 லட்சம் நபர்களுக்கு முதல் தவணையும், 19:34 லட்சம் நபர்களுக்கு இரண்டாம் தவணையும் கோவிட்-19 தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
| Dr.G.S.SAMEERAN I.A.S. |
மாவட்டத்தில் 18 வயதிற்கு மேற்பட்ட 93.6 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும் 68 சதவீதம் நபர்களுக்கு இரண்டாம் தவணை தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுள்ளன. டிசம்பர் மாதத்திற்குள் 100 சதவீதம் நபர்களுக்கு தடுப்பூசி வழங்கிட திட்டமிடப்பட்டு அதற்கான சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
தமிழக அரசின் உத்தரவிற்கிணங்க, மெகா தடுப்பூசி முகாம்கள் மாவட்டத்தில் 12.09.2021 அன்று தொடங்கி இதுவரை 14 மெகா கோவிட் தடுப்பூசி முகாம்கள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன.
இதன்மூலம் 12.8 லட்சம் நபர்களுக்கு கோவிட்-19 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. 18.12.2021 சனிக்கிழமை அன்று 15-வது மெகா கோவிட் தடுப்பூசி முகாம் நடத்த திட்டமிடப்பட்டு அதற்கான விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கிராமப்புறங்களில் 601 முகாம்களும் மாநகராட்சிப்பகுதிகளில் 249 முகாம்கள் மொத்தம் 850
தடுப்பூசி மையங்கள் நிறுவப்பட்டுள்ளன. இதுவரை தடுப்பூரி செலுத்திக்கொள்ளாத பொது மக்கள்
அனைவரும் இந்த முகாமினை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இரண்டாம் தவனை தடுப்பூசி போட்டுக்கொண்டால் மட்டுமே உருமாறி கொண்டிருக்கும் வைரசுக்குதம் எதிரான நோய் எதிர்ப்பாற்றல் முழுமையாக உருவாகும். தற்சமயம் ஒமைக்ரான் என்னும் உருமாறிய கொரோனா பரவி வரும் சூழலில் வெளிநாடுகளிலிருந்து வருபவர்கள் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறார்கள்.
தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களுக்கு நோய்த்தொற்று பரவும் அபாயம் இருப்பதால், தமிழ்நாடு பொது சுகாதார சட்டம் 71(1)-ன்படி, சந்தைப் பகுதிகள்,பேரங்காடிகள்திரையரங்குகள் மற்றும் பிற பொழுதுபோக்கு இடங்கள், பள்ளிகள், கல்லூரிகள், விளையாட்டு திடல்கள், உணவகங்கள், ஆகிய இடங்களில் அதனுடைய உரிமையாளர்கள் வாடிக்கையாளர்களின் இரண்டு தவனை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டதை உறுதி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதனை கண்காணிக்க ஒன்றியங்கள் தோறும் கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
எனவே, பொது மக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள மேற்படி முகாம்களில் தடுப்பூசி செலுத்தி பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ஜி. எஸ் சமீரன் கேட்டுக்கொண்டுள்ளார்.
No comments
Thank you for your comments