Breaking News

மாசாணியம்மன் கோவில் உதவி ஆணையர் மற்றும் செயல் அலுவலர் கருணாநிதி மீது வலுக்கும் குற்றச்சாட்டு

கோவை:

கோவை ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் உதவி ஆணையர் மற்றும் செயல் அலுவலராக பணிபுரியும் கருணாநிதியின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளுடன்  இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்துக்கு புகார்கள் வந்துள்ளன. 

இதுகுறித்து விளக்கவுரை மற்றும் மறுப்புரை கேட்டு கருணாநிதிக்கு இந்து சமய அறநிலை துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், மறுப்பு ஏதும் கிடைக்காத பட்சத்தில் துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Click here to more view 👆 about LVS EYE Hospital Facility 

இதுகுறித்து மாசாணி அம்மன் கோவிலில் பணி புரியும் அர்ச்சகர்கள் தெரிவிக்கையில்,

உதவி ஆணையர் மற்றும் செயல் அலுவலராக பணிபுரியும் கருணாநிதி என்பவர் கோவில் ஊழியர்களிடம் ரூ.6,50,000 பணத்தைப் பெற்றுக் கொண்டு கால அவகாசம் முடிந்தும் திருப்பி செலுத்தவில்லை. 

மேலும் அர்ச்சகர் கருப்புசாமி இடம் தனது வீட்டிற்கு தேவையான பர்னிச்சர் பொருட்களை வாங்கியுள்ளார்.  அர்ச்சகர் கருப்புசாமி மற்றும் அவரது உதவியாளரை இரவு நேர காவலாளியாக பணிபுரிய நிர்ப்பந்தம் செய்துள்ளார். 

மேலும் பல்வேறு புகார்களை இந்து சமய அறநிலைத்துறை அலுவலகத்திற்கு அனுப்பியுள்ளனர். 

ஆனால் செயல் அலுவலர் கருணாநிதியோ தன் மீது குற்றம் சுமத்தி விட்டார்கள் என்று கோவிலில் பணிபுரிபவர்களிடம் காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படுவது மன உளைச்சலை ஏற்படுத்துவதுடன் மிகுந்த வேதனையாக உள்ளது. என்று தெரிவித்தார்.

No comments

Thank you for your comments