தருமபுரி நகர B1 காவல் நிலையம் சார்பில் புகார் மனு மேலா...
தருமபுரி :
தருமபுரி நகர B1 காவல் நிலையம் சார்பில் புகார் மனு மேலா நடைபெற்றது. இரண்டாவது வாரமாக குள்ள கவுண்டர் திருமண மண்டபத்தில் நடைபெற்று வருகிறது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடமிருந்து பெறப்பட்ட புகார் மனுக்கள் மற்றும் காவல் நிலையத்தில் பெறப்பட்ட புகார் மனுக்கள் மீது தீர்வுகாண உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதனடிப்படையில், மனுதாரர்கள் மற்றும் எதிர்மனுதாரர்களை வரவழைத்து நகர பி1 காவல் நிலையம் காவல் உதவி ஆய்வாளர்கள் பெருமாள், பாலசுப்பிரமணியன் மற்றும் மணிவண்ணன், முன்னிலையில் தலைமை காவலர்கள் கபில்தேவ், அமுதலட்சுமி, மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் மனுக்களை விசாரித்து புகார் மனு மீது தீர்வு கண்டு உண்மை தன்மை கேட்டறிந்து மனுக்கள் மீது நடவடிக்கை எடுத்து முடித்து வைத்து வருகின்றனர்.
இதன் மூலம் புகார் மனுக்கள் விரைவில் விசாரித்து பாதிக்கப்பட்ட மனுதாரர்களுக்கு தீர்வு கண்டு வருகின்றனர்.
தருமபுரி நகர காவல் நிலைய காவலர்கள் சிறப்பான முறையில் செயல்பட்டு வருவதால் பொதுமக்கள் இடையே நல்ல வரவேற்பு மற்றும் பாராட்டுகளையும் தெரிவித்துவருகின்றனர்.
No comments
Thank you for your comments