பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றார் அமைச்சர் சாமிநாதன்
ஈரோடு, டிச.26-
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவிற்கிணங்க, செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அவர்கள், ஈரோடுமாவட்டம், சென்னிமலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராம ஊராட்சிபகுதிகளில் பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து, கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவிற்கிணங்க, ஈரோடு மாவட்டம், சென்னிமலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராம ஊராட்சிபகுதிகளில் 25.12.2021 அன்று செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அவர்கள், பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து, கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.
| Click here to more view 👆 about LVS EYE Hospital Facility |
இந்நிகழ்ச்சியில் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அவர்கள் தெரிவித்ததாவது,
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழக மக்களின் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கென பல்வேறு திட்டங்களைஅறிவித்து தொடர்ந்து சிறப்புடன் செயல்படுத்தி வருகிறார்கள். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராம ஊராட்சி பகுதிகளில் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கண்டறிந்து அடிப்படை கட்டமைப்பு வசதிகளை பொதுமக்களுக்கு விரைந்து வழங்க வேண்டுமென அறிவுறுத்தியுள்ளார்கள்.
மேலும், பொதுமக்களின் குறைகளை சீர்செய்யும் வகையில் 25.12.2021 அன்று ஈரோடு மாவட்டம், பெருந்துறைவட்டம், சென்னிமலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சொக்க நாதபாளையம், எல்லை குமாரபாளையம், சக்திநகர் காலனி, ராமலிஙக்கபுரம் அம்பேத்கர் காலனி, ராமலிங்கபுரம், ஒரத்துப் பாளையம், கொடுமணல், குப்பம்பாளையம் காலனி, குப்பம்பாளையம் நாடார் காலனி, ராசாப்பாளையம், ஓலப் பாளையம், பி.காசி பாளையம், வெங்கமேடு, திட்டம் பாளையம், கரட்டுப் பாளையம், செலம்பக் கவுண்டன் பாளையம், மோளப் பாளையம் பள்ளிக்கூடம் அருகில், மோளப் பாளையம் கொடிக்கம்பம், மாதேஸ்வரன் நகர், செந்தூர் கார்டன், சரவணாநகர் காலனி, காந்திநகர் விநாயகர் கோயில் அருகில், இச்சிப்பட்டி காலனி, காளிக் கோடெக்ஸ் காலனி, திருநகர், எம்.பி.என்.நகர் பஸ் ஸ்டாப், சரவணபுரி, சின்னபிடாரியூர், தீரன் சின்ன மலைநகர், நாமக்கல் பாளையம் மற்றும் குருநகர் ஆகிய கிராம பகுதிகளைச் சேர்ந்த பொது மக்களிடமிருந்து, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, விலையில்லா வீட்டுமனைபட்டா, புதிய குடும்ப அட்டை மற்றும் அடிப்படை வசதிகளான சாலை வசதி, குடிநீர் வசதி, மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாகமனுக்கள் பெறப்பட்டுள்ளது. பெறப்பட்ட மனுக்களில் தகுதியான மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது.
மேலும், பொதுமக்களின் குடிநீர் தேவையைசீர் செய்யும் வகையில் ரூ.250 கோடி மதிப்பீட்டில் புதிய கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகள் விரைவில் துவங்கப்படவுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பதவியேற்று ஏழு மாதகாலத்தில் தேர்தல் நேரத்தின் போது அளித்த தேர்தல் வாக்குறுதிகளில் பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளர்கள். குறிப்பாக கொரோனாநோய்த் தொற்றுஅச்சுறுத்தல் காரணமாக தமிழக மக்களின் துன்பங்களை போக்கு வதற்காகஅவர்களின் வாழ்வாதாரத்திற்க்கு உதவும் வகையில் அரிசிகுடும்ப அட்டை தாரர்களுக்கு ரூ.4000/& கொரோனா சிறப்பு நிவாரண நிதியுடன் 14 வகையான அத்தியாவசிய பொருட்களையும் வழங்கியுள்ளார்கள். மேலும், ஆவின் பால் விலையை லிட்டர் ஒன்றுக்கு ரூ.3 வீதம் குறைக்கப் பட்டுள்ளது. மகளிருக்கு நகரப் பேருந்துகளில் இலவச பேருந்து பயண வசதியையும் ஏற்படுத்தி தந்துள்ளார்கள். வேளாண் பெருங்குடி மக்களின் வாழ்வு மேம்பாட்டிற்காக விவசாயத்திற்காக தனியாக பட்ஜெட் தாக்கல் செய்யப் பட்டுள்ளது. மக்களின் மேம்பாட்டிற்காக அரசு அளிக்கின்ற நலத்திட்ட உதவிகளை பொதுமக்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டு பயன்பெற வேண்டுமமென செய்தித்துறை அமைச்சர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் செல்வி.பிரேமலதா, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்;) உமாசங்கர், தனிதுணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) குமரன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலஅலுவலர் கோதை செல்வி, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் எஸ்.ஆர்.செல்வம், சென்னிமலை ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் டி.காயத்ரி இளங்கோ, பெருந்துறை வட்டாட்சியர் கார்த்தி, சென்னிமலை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சிமன்ற தலைவர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் மற்றும் தொடர்புடைய துறை அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments