Breaking News

அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி கோரிக்கை மனு... செவி சாய்க்குமா மாவட்ட நிர்வாகம்...

கோவை :

கோவை மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மக்கள் நீதி மையம் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் இன்ஜினியர் பிரபு தலைமையில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி கோரிக்கை மனு கொடுத்தனர். 

பின்னர் மாவட்ட செயலாளர் பிரபு தெரிவிக்கையில்,

வார்டு எண் 80 கெம்பட்டி காலனியில் உள்ள மட்டை சாலைப் பகுதியில் சுமார் 200 குடும்பங்கள் அடிப்படை வசதி இல்லாமலும் பராமரிப்பு இல்லாமலும் வாழ்ந்து வருகின்றனர்.

அந்த பகுதியில் உள்ள வீடுகள் பராமரிப்பு இல்லாமல் இடிந்து விழும் நிலையில் உள்ளது என மூன்று மாதங்களுக்கு முன்பாகவே குறை தீர்க்கும்  புகார்பெட்டியில் புகார் அளித்தோம். ஆனால் எந்தவிட நடவடிக்கையும் எடுக்கவில்லை...

இந்நிலையில், தற்போது அந்தப் பகுதியில் ஒரு வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் 2 வயது சிறுவன் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. 

மேலும் இது போன்ற அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை மேற்கொண்டு அந்தப் பகுதியில் வாழும் மக்களுக்கு குடிநீர் வசதி, பாதாள சாக்கடை திட்டம், தெருவிளக்குகள், சுகாதார மேம்பாடு போன்ற அடிப்படை வசதிகள் அமைத்துத் தரவேண்டும் என்று கோரிக்கை மனு கொடுத்துள்ளதாக  தெரிவித்தனர்... 

எந்த வித அசம்பாவிதங்கள் நடைபெறும் முன் செய்யவேண்டிய சீரமைப்பு பணிகளை போர்க்கால அடிப்படையில் செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

கோரிக்கை மனு அளிக்கும்போது உடன் துணைச் செயலாளர் தனவேந்திரன் மாநகர செயலாளர் தாஜுதீன் மற்றும் சிராஜுதீன் வார்டு செயலாளர் பூபதி ராஜ் மற்றும் கட்சியின் நிர்வாகிகள் கிருஷ்ணமூர்த்தி மஞ்சு மாரிமுத்து ஆகியோர் உடன் இருந்தனர்.

இவர்களது மனுவுக்குக்கும், அப்பகுதி மக்களின் கோரிக்கை குரலுக்கும் செவிமடுக்குமா மாவட்ட நிர்வாகம்... கோரிக்கை மனு மீது துரிதமான நடவடிக்கை எடுக்குமா..? அல்லது துயரம்  கண்டு கிடப்பில் கிடக்குமா..? என்பதை பொறுத்திருந்தான் பார்க்கவேண்டும்...


No comments

Thank you for your comments