Breaking News

கோவையில் கொட்டி தீர்த்த கனமழை... போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி

கோவை:

கோவையில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக கொட்டி தீர்த்த கனமழை. மழையின் காரணமாக பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

லங்கர் கார்னர் ரயில்வே பாலத்தின் கீழ் தண்ணீர்  காணப்பட்டது. தனியார் பேருந்து ஒன்று சென்று விடலாம் என்று நினைத்து முன்னோக்கிச் சென்று நீரின் நடுவே நின்றது பேருந்தில் இருந்த 8 பயணிகள் தன்னீரில் தத்தளித்தபடி குழந்தைகள் உட்பட அபயக்குரல் எழுப்பினார்கள்.

பின்னர் தெற்கு தீயணைப்பு படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு 8 பேரையும் கயிறு கட்டி தீயணைப்பு வீரர்கள் வெளியில் அழைத்து வந்தனர். 

மேலும் அவிநாசி ரோடு மேம்பாலத்தின் கீழ் ஒரு சொகுசு கார் ஒன்று நீரில் மூழ்கியது அதில் இருந்த மூன்று பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள். 

கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் சமீரன் மற்றும் கோவை மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு தீவிரமாக மீட்பு பணியில் ஈடுபட அறிவுறுத்தினார்கள். 

பேருந்தை பொக்லைன் இயந்திரம் மூலம் மீட்கப்பட்டு பாலத்தின் கீழ் உள்ள தண்ணீரை மோட்டார் மூலம் அகற்றப்பட்டு பின்னர் போக்குவரத்து சீராமைக்கப்பட்டது.

No comments

Thank you for your comments