நாமக்கல்லில் நாளை மின் விநியோகம் நிறுத்தம்
நாமக்கல் :
பரமத்திவேலூர் வட்டம் சோழசிராமணி துணை மின்நிலையத்தில் நாளை (திங்கட்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் சுற்று வட்டார பகுதிகளில் மின்சாரம் விநியோகம் தடை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை சோழசிராமணி, சுள்ளிபாளையம், சக்திபாளையம், சின்னாம்பாளையம், ஜமீன் இளம்பள்ளி, சித்தம் பூண்டி, மாரப்பம்பாளையம், இ.நல்லாகவுண்டபாளையம், பி.ஜி.வலசு ஆகிய பகுதிகளில் மின்சாரம் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments
Thank you for your comments