வாலாங்குளம், உக்கடம் பெரியகுளம் ஆகிய இடங்களில் சுற்றுலாத் துறை அமைச்சர் மா.மதிவேந்தன்
கோயம்புத்தூர் :
கோயம்புத்தூர் மாவட்டம், வாலாங்குளம், உக்கடம் பெரியகுளம் ஆகிய இடங்களில் சுற்றுலாத் துறை அமைச்சர் மா.மதிவேந்தன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது, சுற்றுலாதுறை இயக்குநர்/ தமிழ்நாடு சுற்றுலாத்துறை நிர்வாக இயக்குநர் சந்திப்நந்தூரி இ.ஆ.ப., மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.ஜி.எஸ்சமீரன் ராஜகோபால் மாநகராட்சி ஆணையர் சுன்கரா இ.ஆ.ப., மாவட்ட சுற்றுலா அலுவலர் அரவிந்தகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
அதனைத்தொடர்ந்து, காந்திபுரத்தில் உள்ள ஹோட்டல் தமிழ்நாடு விடுதியை அமைச்சர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அமைச்சர் டாக்டர்.மா.மதிவேந்தன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது,
சுற்றுலா, சமுதாய வளர்ச்சிக்கு ஓர் உந்துகோலாகவும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய காரணியாகவும் திகழ்கிறது. குளங்களுக்கு வருகைதரும் சுற்றுலாப் பயணிகளுக்கு சிறந்த சேவைகளை வழங்கும் வகையிலும், மனதிற்கு புத்துணர்ச்சியையும், மகிழ்ச்சியையும், ஓய்வையும், கேளிக்கையையும் மற்றும் புதிய அனுபவங்களையும் அளிக்கும் வகையில், சுற்றுலா கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தபட உள்ளது.
சுற்றுலாத்துறை மானியக் கோரிக்கையில், வாலாங்குளம் உக்கடம் பெரியகுளம், ஆகியவற்றில் படகு வசதி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து, இன்று வாலாங்குளம், உக்கடம் பெரியகுளம் ஆகியவற்றில் படகு வசதி செய்வதற்கான சாத்தியகூறுகள் தொடர்பாக நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
கோவை மாவட்டத்தில் ஸ்மார் சிட்டி திட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் முடிவடைந்துபின், கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புகள் குறைந்த பிறகு, சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். உள்ளூர் சுற்றுலாவை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.
ஹோட்டல் தமிழ்நாடு விடுதியை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் பணிகள் முடிவடையும். ஹோட்டல் தமிழ்நாடு-இல் ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்ய முடியும். இத்திட்டம் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்டது. இதன்மூலம் ரூ.22 இலட்சம் வருமானம் கிடைத்துள்ளது.
இந்தியாவிலே முதன் முறை நம் மாநிலத்தின் சார்பாக மெக்சிகோ நாட்டில் நடைபெற்ற ஹட் ஏர் பலூன் திருவிழாவில் (Hot Air Balloon Festival) நான், சுற்றுலாத்துறை அரசு செயலாளர் கலந்து கொண்டோம். இதே போன்று ஹட்ஏர் பலூன் (Hot Air Balloon Festival) திருவிழா பொள்ளாச்சியில் நடத்தப்படவுள்ளது என்று அமைச்சர் தெரிவித்தார்.
No comments
Thank you for your comments