Breaking News

கல்வி உதவித் தொகை பெற உடனே விண்ணப்பிக்கவும்...

கோவை:

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்படுத்தப்படும் மத்திய அரசு நிதி ஆதரவிலான போஸ்ட் மெட்ரிக் (பத்தாம் வகுப்பிற்கு மேற்பட்ட அனைத்து படிப்புகளும்) கல்வி உதவித் தொகை திட்டம் மற்றும் மாநில அரசு சிறப்பு போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித் தொகை திட்டம் ஆகிய திட்டங்களுக்குரிய இணையதளம் 13.12.2021 அன்று திறக்கப்பட்டுள்ளது. 

கோவை மாவட்டத்தில் மேற்கண்ட திட்டங்களின் கீழ் பயன்பெறத் தகுதி வாய்ந்த ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறித்துவ மதத்திற்கு மாறிய ஆதிதிராவிடர் இன மாணாக்கர்களிடமிருந்து புதிய மற்றும் புதுப்பித்தல் கல்வி உதவித் தொகை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

அதே போல் மத்திய அரசு நிதி ஆதரவிலான ப்ரி மெட்ரிக் (ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்புகள்) கல்வி உதவித் தொகைத் திட்டத்திற்கான இணையதளமும் திறக்கப்படவுள்ளதால் நமது மாவட்டத்தில் மேற்கண்ட திட்டத்தின் கீழ் பயன்பெறத் தகுதி வாய்ந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இன மாணாக்கர்களிடமிருந்து புதிய மற்றும் புதுப்பித்தல் கல்வி உதவித் தொகை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஆகவே, மாணாக்கர்களும் தமது கல்வி உதவித் தொகை விண்ணப்பங்களை உரிய முறையில் பூர்த்தி செய்து சாதிச் சான்று, வருமானச் சான்று, மதிப்பெண் சான்று, வங்கி சேமிப்புக் கணக்கு புத்தக நகல், ஆதார் எண் உள்ளிட்ட இன்ன பிற ஆவணங்களுடன் 13.01.2022க்குள் http://escholarship.tn.gov.in/ என்ற  கல்வி இணையதள வழியில் விண்ணப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

கல்வி நிறுவனங்கள் தங்களது பள்ளி/கல்லூரிகளில் ஏற்கனவே செயல்பட்டு வரும் உதவி மையம் (HELP DESK) மூலமாக மாணாக்கர்களுக்குரிய கல்வி உதவித் தொகை விண்ணப்பங்களை உரிய முறையில் பூர்த்தி செய்திடவும், மாணாக்கர்கள் சார்பான விண்ணப்பங்களை எவ்வித தவறுகளுமின்றி பதிவேற்றம் செய்திடவும், நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப.,  தெரிவித்துள்ளார்.

Click here 👉அதிகாரப் பூர்வ இணையதளம் http://escholarship.tn.gov.in/

No comments

Thank you for your comments