வேலூர் மாநகராட்சியில் மண்டல உதவி கமிஷனர்கள் மாற்றம்...
வேலூர் :
வேலூர் மாநகராட்சியில் புதிய மண்டல உதவி கமிஷனர்கள் நியமனம் செய்து கமிஷனர் அசோக்குமார் உத்தரவிட்டுள்ளார்
வேலூர் மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார் மாநகராட்சியில் உள்ள 3 மண்டலங்களுக்கும் புதிய உதவி கமிஷனர்களை நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
இதில் வேலூர் மாநகராட்சி 1வது மண்டல உதவி கமிஷனர் செந்தில்குமார்(பொறுப்பு) இவருக்கு மாற்றாக மாநகராட்சி உதவி கமிஷனராக (நிர்வாகம்) பணியாற்றி வந்த செந்தில்குமரன் நியமிக்கப்பட்டுள்ளார். ‘
அதேபோல் 2வது மண்டல உதவி கமிஷனர் மதிவாணன் (பொறுப்பு) இவருக்கு மாற்றாக 3வது மண்டல உதவி கமிஷனராக பணியாற்றி வந்த வசந்தி நியமிக்கப்பட்டுள்ளார்.
மாநகராட்சி உதவி ஆணையாளர் (வருவாய்) சுதா 3வது மண்டல உதவி கமிஷனராக நியமிக்கப்பட்டார்.
4வது மண்டலத்தில் பணிபுரிந்து வந்த உதவி கமிஷனர் பிரபு ஜாசப்குமார் 4வது மண்டலத்திலேயே பணியை தொடர்கிறார்.
🔥 முக்கியச் செய்திகள்
👌 லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் கணக்கில் வராத பணம், கிலோ கணக்கில் தங்கம் வெள்ளி பறிமுதல்
👌 மீண்டும் ஓர் அதிசய கிணறு... ஆர்வமுடன் பார்த்துச் செல்லும் பொதுமக்கள்
👌 போதையில் ஆம்புலன்ஸ் மீது ஏறி குத்தாட்டம்.!
👌 முதல்வர் ஸ்டாலினின் எதிர்கால திட்டங்கள் என்ன...? தெலங்கானா முதல்வர் சந்திப்பின் பின்னணி என்ன..?👌 கருணாநிதியை விட ஸ்டாலின் பயங்கரமானவர்... முதலமைச்சர் ஸ்டாலினை சீண்டும் ஹெச்.ராஜா..
இதுகுறித்து கமிஷனர் அசோக்குமார் கூறுகையில்,
'வேலூர் மாநகராட்சியில் நகரமைப்பு கட்டிட ஆய்வாளர்கள் உதவி கமிஷனர்களாக பொறுப்பு வகித்து வந்தனர்.
தற்போது நேரடியாக உதவி கமிஷனர்களை நியமித்துள்ளதால் பொறுப்பு வகித்து வந்தவர்கள், தங்களது பழைய பணிகளை தொடர்வார்கள்.
அதன்படி செந்தில்குமார், மதிவாணன் ஆகியோர் நகரமைப்பு கட்டிட ஆய்வாளர் பணிகளை தொடர்வார்கள்' என்றார்.
No comments
Thank you for your comments