மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜ கோபால் தலைமையில் ஆலோசனை கூட்டம்
கோயம்புத்தூர்:
கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகக் கூட்டரங்கில் கோவை மாநகராட்சியில் அவினாசி சாலை மேம்பாலம், காளீஸ்வரா மில் சாலை, லங்கா கார்னர், கிக்கானீ ரயில்வே பாலம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய இடங்களில் மழைநீர் தேங்குவதை முற்றிலும் தவிர்க்கும் பொருட்டு நிரந்தர தீர்வு காண்பதற்கான முதற்கட்ட ஆலோசனைக்கூட்டம் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜ கோபால் சுன்கரா இ.ஆ.ப., தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் பேசியதாவது,
கோவை மாநகராட்சியில் அவினாசி சாலை மேம்பாலம், காளீஸ்வரா மில் சாலை, லங்கா கார்னர், கிக்கானீ ரயில்வே பாலம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய இடங்களில் மழைநீர் தேங்குவதை முற்றிலும் தவிர்க்கும் பொருட்டு நிரந்தர தீர்வு காண்பதற்காகவும், தென்மேற்கு, வடகிழக்கு பருவமழைகள் துவங்குவதற்கு முன்பாகவே மழைநீர் வடிகால்களை தூர்வாரிட வேண்டும்.
மேலும், எவ்வகையான அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ள வேண்டுமென விரிவான திட்டமிடுதல் வேண்டும். இவ்விடங்களில் சிறப்பு கவனம் செலுத்தி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி கண்காணிக்க வேண்டும். அதிவேக மோட்டார்கள் பொருத்தி தேங்கும் மழைநீரை வெளியேற்றுதல், மழைநீரை வேறு இடங்களுக்கு திருப்பி விட சாத்தியக் கூறுகளை கண்டறிதல் வேண்டும்.
மாநகராட்சிப் பொறியாளர்கள், சுகாதார அலுவலர்கள் மற்றும் மருத்துவர்கள், தொழிலதிபர்கள், தலைசிறந்த கல்லூரி பொறியாளர்கள், தன்னார்வலர்கள் ஆகியோர்களை ஒருங்கிணைத்து வல்லுநர் குழு அமைத்து உரிய திட்டமிடுதல் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள ஆலோசிக்கப்பட்டது.
ஒரு வாரத்தில் மீண்டும் இக்குழுவில் யார் யார் இடம் பெறுவது என்பது குறித்தும், தொடர் நடவடிக்கைகளில் மேற்கொள்வது குறித்து மீண்டும் கூடி ஆலோசிக்கப்படும்.
விரிவான திட்ட அறிக்கை தயாரித்து இக்குழுவிற்கு ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும்" என மாநகராட்சி ஆணையாளர் தெரிவித்தார்கள்,
இந்த ஆய்வுக் கூட்டத்தில் மாநகராட்சி துணை ஆணையாளர் மரு.மோ.ஷர்மிளா அவர்கள், சூயஸ் திட்ட இயக்குநர் திரு.அமிர்த் நியோகி, மாநகராட்சி பொறியாளர்கள் திரு.ராமசாமி, திரு.பிரபாகர். ஓய்வு பெற்ற ஆர்கிடெக்ட், தொழில்நுட்ப வல்லுநர்கள், தன்னார்வலர்கள். ஓய்வு பெற்ற பொறியியல் கல்லூரி பேராசிரியர் உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள்.
No comments
Thank you for your comments