சர்வ ஜன போஜனா திட்டம் தொடங்கி வைத்தார் சிவ சண்முக சுந்தர பாபுஜி சுவாமிகள்
கோவை :
கோவை மாவட்டம் மலுமிச்சம்பட்டி பகுதியில அமைந்துள்ள ஶ்ரீ நாக சக்தி அம்மன் சமூக ஆன்மீக அறக்கட்டளை சார்பாக பல்வேறு சமூக சேவை பணிகள் செய்யப்பட்டு வருகிறது.
அறக்கட்டளையின் நிறுவன தலைவர் சிவ சண்முக சுந்தர பாபுஜி சாமிகள் தலைமையில் கொரோனா காலகட்டத்திலே ஏராளமான பொதுமக்களுக்கு 10 லட்சத்துக்கு மேல் நிலவேம்பு கசாயம், கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது.
அறக்கட்டளை சார்பாக தற்போது சர்வஜன போஜனா திட்டம் என்ற திட்டம் துவக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் மலுமிச்சம்பட்டி அன்பு நகர் அப்பார்ட்மெண்டில் இருக்கின்ற வயதானவர்கள், உடல் ஊனமுற்றவர்களுக்கு அன்னதானம் வழங்கும் திட்டத்தை சிவ சண்முக சுந்தர பாபுஜி சுவாமிகள் தொடங்கி வைத்தார்.
இதுகுறித்து செய்தியாளர்களுக்கு தெரிவித்தாவது, அறக்கட்டளை சார்பாக முதியோர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு தினந்தோறும் மதிய உணவு அளிக்கப்படுகிறது.
கொரோனா காலகட்டத்தில் அறக்கட்டளை சார்பாக கபசுர நீர் வழங்கி உயிரைக் காப்பாற்றும் உன்னத திட்டம் செயல்படுத்தப்பட்டது.
அதையடுத்து தற்போது சர்வஜன போஜனா திட்டம் என்ற திட்டத்தை உருவாக்கி அதன் மூலமாக தினமும் ஆதரவற்றவர்களுக்கு ஆயிரம் பேருக்கு உணவளிக்க வேண்டும் என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது. கோவை பிறபகுதிகளிலும்
இந்ததிட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என்று ஜகத்குரு ஸ்ரீலஸ்ரீ பாபுஜி சாமிகள் தெரிவித்தார்.
No comments
Thank you for your comments