Breaking News

பட்டப்பகலில் துணிகரம்... 80 சவரன் தங்க நகை மற்றும் 5 லட்சம் ரொக்கப் பணம் கொள்ளை

 காஞ்சிபுரம்.

காஞ்சிபுரம் மாமல்லன் மெட்ரிக் பள்ளி அருகே மாருதி நகரில் வசிக்கும் ஆடிட்டர் மேகநாதன் என்பவரது வீட்டில் ஆண் நபர்கள் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டில் இருந்த பெண்களிடம் கத்தியை காட்டி மிரட்டியும், அவர்களது கை கால்களை கட்டிப்போட்டும் கழுத்தில் அணிந்திருந்த நகைகள் உட்பட வீட்டில் இருந்த சுமார் 80 சவரன் நகைகள், ஒரு கிலோ வெள்ளிப் பொருட்கள் மற்றும் ரூபாய் 5 லட்சம் ரொக்கப் பணம் ஆகியவற்றை முகமூடி அணிந்து வந்த நான்கு கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

பட்டப்பகலில் நடந்த இந்த துணிகர கொள்ளைச் சமபவம்  அப்பகுதியில் குறித்து காஞ்சி தாலுக்கா போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.







No comments

Thank you for your comments