கோவையில் போலீஸாருக்கு முதலுதவி பயிற்சி
கோவை:
கோவை மாநகரில் பணியாற்றும் போலீசாரில், 76 பேருக்கு, நேற்று முதலுதவி பயிற்சி அளிக்கப்பட்டது.
கோவை மாநகரில் உள்ள 15 காவல் நிலையங்களில் பணியாற்றும் போலீசாருக்கு, 'பர்ஸ்ட் ஹார்ட் பவுண்டேசன்ஸ் நெட்வொர்க்' சார்பில் முதலுதவி பயிற்சி அளிக்கப்படுகிறது.
முதலுதவி பயிற்சி வகுப்பு, மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் வாரந்தோறும் வியாழக்கிழமை நடைபெறுகிறது.
பொது இடங்கள், சாலைகளில் ஒருவர் திடீரென்று மயங்கி விழுவது, மாரடைப்பால் பாதிக்கப்படுவது, விபத்தில் சிக்கி சுவாசத்துக்கு போராடுவது போன்றவை நிகழ்ந்தால் போலீசார் விரைந்து அவர்களுக்கு எவ்வாறு முதலுதவி அளித்து உயிரை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பர்ஸ்ட் ஹார்ட் தன்னார்வ தொண்டு நிறுவனர் டாக்டர் சரவணன் 76 போலீசாருக்கு பயிற்சி அளித்தார்.
நேற்று நடந்த பயிற்சியை, போலீஸ் கமிஷனர் பிரதீப் குமார் மற்றும் உயரதிகாரிகள் பார்வையிட்டு, பாராட்டு தெரிவித்தனர்.
வரும் நாட்களில் மண்டல வாரியாகவும், போலீஸ் ஸ்டேஷன் வாரியாகவும், முதலுதவி பயிற்சி அளிக்கப்படும் என, இந்த அமைப்பினர் தெரிவித்தனர்.
இதுவரை, சுழற்சி முறையில் நடைபெறும் முதலுதவி பயிற்சி மாநகரில் 1,741 பேருக்கு இந்த அமைப்பினர் பயிற்சி அளித்துள்ளனர்.
No comments
Thank you for your comments