Breaking News

ரேஷன் அரிசி கடத்திய வழக்கில் தொடர்புடைய 3 பேர் கைது

காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் அருகே ஒலிமுகமதுப்பேட்டையில் 10 டன் ரேஷன் அரிசி கடத்திய வழக்கில் தொடர்புடைய 3 பேர் கைது. 

குடிமைப்பொருள் வழங்கல் குற்றம் புலனாய்வுப் பிரிவு போலீஸார் தீவிர நடவடிக்கை.

காஞ்சிபுரம் மாவட்டத்தில்  தமிழக அரசு குடும்ப அட்டைகளுக்கு நியாயவிலைக் கடைகளில் இலவசமாக வழங்கிடும் ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி, அதிக விலைக்கு விற்பனை செய்ய வெளிமாநிலங்களுக்கு அடக்கிக் கொண்டு செல்லப்படுகிறது.

மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தலைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் காவல்துறையினரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் வருவாய் துறையினரும் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் காஞ்சிபுரம் ஒலிமுகம்மது பேட்டை காவாங்கரை பகுதியில் வெளிமாநிலங்களுக்கு கடத்தி கொண்டு செல்ல தயாராக இருந்த 10 டன் ரேஷன் அரிசியையும் கடத்திச் செல்ல தயாராக இருந்த 4 லாரிகளையும் பறிமுதல் செய்தனர்.

ரேஷன் அரிசி கடத்தியவர்கள் மீது காஞ்சிபுரம் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

போலீசாரின் தீவிர விசாரணையில் ரேஷன் அரிசி கடத்தலில் தொடர்புடைய ஒளி முகமது பேட்டை பகுதியைச் சேர்ந்த அரிசி உரிமையாளர் பிலால், லாரி டிரைவர் சாதிக் பாஷா, கூலியாள் நிஜாம் ஆகிய மூன்று வாலிபர்களையும் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மூவரையும் சிறையில் அடைத்துள்ளனர்.

இச்சம்பவத்தில் தொடர்புடைய மேலும் சிலரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

No comments

Thank you for your comments