இன்று வேளாண் பல்கலை.,யில் அங்கக வேளாண்மை பயிற்சி.... பங்கேற்க அழைப்பு
கோவை:
வேளாண் பல்கலையில், நடக்க உள்ள நேரடி அங்கக வேளாண் பயிற்சியில் பங்கேற்க, அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நேரடி தமிழ் வழி அங்கக வேளாண்மை பயிற்சி செவ்வாய்க்கிழமை (டிசம்பா் 7) நடைபெறுகிறது.
பல்கலைக்கழகத்தின் வளங்குன்றா அங்கக வேளாண்மைத் துறை மூலம் நடைபெறும் இந்தப் பயிற்சியில், அங்கக முறையில் பயிா் சத்துகள் மேலாண்மை, அங்கக முறையில் களை மேலாண்மை, இயற்கை முறையில் பூச்சி, நோய் மேலாண்மை போன்ற தலைப்புகளில் பயிற்சி நடைபெறுகிறது.
இதில் பங்கேற்பதற்கு ரூ.590 பயிற்சிக் கட்டணமாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பான மேலும் விவரங்களுக்கு 0422 6611206, 2455055 என்ற எண்களைத் தொடா்பு கொள்ளலாம் என்று பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
மேலும், organic@tnau.ac.in என்ற இ-மெயிலிலோ தொடர்பு கொள்ளலாம்.

No comments
Thank you for your comments