இந்தியா-ரஷ்யா இடையே ரூ.5,200 கோடிக்கு ஒப்பந்தம்
புதுடெல்லி, டிச.6-
இந்தியா-ரஷ்யா இடையே ரூ.5,200 கோடிக்கு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. ராணுவம், சரக்கு போக்குவரத்து உள்ளிட்ட துறைகளில் பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
பிரதமர் நரேந்திர மோடி-ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் பங்கேற்கும் இரு நாடுகள் இடையேயான 21வது உச்சி மாநாடு டெல்லியில் நடைபெற்றது.
இரு நாடுகள் இடையேயான உறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் பாதுகாப்பு, வர்த்தகம், முதலீடு, எரிசக்தி மற்றும் தொழில் நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக இரு நாடுகளின் பாதுகாப்புத்துறை மற்றும் வெளியுறவுத்துறைகளுக்கு இடையேயான 2+2 பேச்சுவார்த்தை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதற்காக ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர் கேய் லால்ரோவ் பாதுகாப்புத்துறை அமைச்சர் செர்கேய் ஷொய்கு நேற்று இரவே டெல்லி வந்தனர்.
ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர், பாதுகாப்புத்துறை அமைச்சருடன் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
இந்த பேச்சு வார்த்தையின்போது இந்தியா-ரஷ்யா இடையே ரூ.5,200 கோடிக்கு ஒப்பந்தங்கள் கையெழுத் தானது. ராணுவம், சரக்கு போக்கு வரத்து உள்ளிட்ட துறைகளில் பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
ரஷ்ய தயாரிப்பான நவீன ரக ஏ.கே.203 தானியங்கி துப்பாக்கிகளை இந்திய ராணுவத்துக்கு வாங்க ஒப்பந்தமிடப்பட்டது. 6 லட்சத்து ஆயிரத்து 427 ஏ.கே. 203 ரக துப்பாக்கிகளை இந்தியா வாங்குகிறது.
2031 வரை 10 ஆண்டுகளுக்கு ரஷ்யாவிடம் இருந்து ஏ.கே.203 ரக துப்பாக்கிகளை வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது.
ரஷ்ய தொழில்நுட்ப உதவியுடன் அமேதியில் உள்ள தொழிற்சாலையில் துப்பாக்கிகள் தயாரிக்கப்பட உள்ளன.
இந்த பேச்சுவார்த்தையின் போது ஆப்கானிஸ்தான் விவகாரம், தீவிரவாத அச்சுறுத்தலுக்கான வாய்ப்பு ஆகியவை குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.
பிரதமர் மோடி-ரஷ்ய அதிபர் புதின் இடையேயான உச்சி மாநாடு மாலை நடைபெற்றது. இந்த சந்திப்பின்போது இரு நாடுகள் இடையேயான நல்லுறவுகள் குறித்தும், திட்டங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
Добро пожаловать, г-н президент!
— Narendra Modi (@narendramodi) December 6, 2021
Welcome to India my friend President Putin. Our meeting today will strengthen our Special and Privileged Strategic Partnership. The initiatives that we take today will further increase the scope of our cooperation to new areas. @KremlinRussia pic.twitter.com/v699GK4BEM
Had a productive, fruitful and substantial bilateral discussions on defence cooperation with the Russian Defence Minister, General Sergey Shoigu in New Delhi today. India values its special and privileged strategic partnership with Russia. pic.twitter.com/9WNBx6m7ok
— Rajnath Singh (@rajnathsingh) December 6, 2021
Attended the 2+2 Ministerial Dialogue with Russia in New Delhi.
— Rajnath Singh (@rajnathsingh) December 6, 2021
It was a great pleasure to discuss and exchange opinion on certain significant issues of common interest.
We look forward to the Summit meeting to be held later in the evening. pic.twitter.com/KvLCyPFFld
No comments
Thank you for your comments