Breaking News

துடியலூர் பகுதி கழகப் பொறுப்பாளர் அருள்குமார் தலைமையில் 60 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் திமுகவில் ஐக்கியம்

 கோவை :

கோவை மாவட்டம்  26 வது வார்டு வெள்ளக்கிணறு மற்றும் துடியலூர் பகுதிகளைச் சேர்ந்த 60 க்கும் மேற்பட்ட இளைஞர்கள்  துடியலூர் பகுதி கழகப் பொறுப்பாளர் அருள்குமார் தலைமையில், தி.மு.க கோவை மாநகர் மேற்கு மாவட்ட கழகப் பொறுப்பாளர் பையாக்கவுண்டர் (எ) ஆர்.கிருஷ்ணன்  முன்னிலையில் தங்களை தி.மு.கழகத்தில் இணைத்துக் கொண்டனர். 

இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் வெ.நா.பழனியப்பன், 26 வது வட்ட கழகப் பொறுப்பாளர் சண்முகம்,  மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் விஜயகுமார் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



No comments

Thank you for your comments