அமைப்புசாரா நல வாரியங்களில் பதிவு பெற்ற 50,751 தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்
கோயம்புத்தூர்:
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களால் கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா நல வாரியங்களில் பதிவு பெற்ற 50,751 தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி தலைமை செயலகத்தில் துவக்கிவைக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைப்புசாரா மற்றும் கட்டுமான தொழிலாளர் நல வாரியங்களில் பதிவு செய்துள்ள 1500 தொழிலாளர்களுக்கு ரூ.44.19இலட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., வழங்கினார்.
பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது,
கோவை மாவட்டத்தில் 18 அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்களில் பதிவு செய்துள்ள 425 பயனாளிகளுக்கு ரூ.7.06இலட்சம் மதிப்பிலான கல்வி உதவித்தொகை, 3 பயனாளிகளுக்கு ரூ.9,000 மதிப்பிலான மகப்பேறு உதவித்தொகை, 108 பயனாளி ரூ.27 இலட்சம் மதிப்பில் இயற்கை மரண உதவித்தொகை, ஒரு பயனாளிக்கு ரூ.500 மதிப்பில் கண்கண்ணாடி, 963 பயனாளிகளுக்கு ரூ.10.03 இலட்சம் மதிப்பில் ஓய்வூதியம் என மொத்தம் 1500 தொழிலாளர்களுக்கு ரூ.44.19இலட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவித் தொகைகள் வழங்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சித்தலைவர் என தெரிவித்தார்.
No comments
Thank you for your comments