திருச்செங்கோட்டில் கலை, அறிவியல் கல்லூரி! - காணொலி மூலம் திறந்து வைத்தார் முதல்வர்!
நாமக்கல், டிச.2-
திருச்செங்கோடு அடுத்த சித்தாளந்தூரில் புதிதாக தொடங்கப்பட்ட அர்த்தநாரீஸ்வரர் கலை, அறிவியல் கல்லூரியை காணொலிக் காட்சி மூலம் தமிழக முதல்வர் திறந்து வைத்தார்.
திருச்செங்கோடு பகுதி மக்களின் தொடர் கோரிக்கையை ஏற்று இந்து சமய அறநிலையத்துறை சார்பில் திருச்செங்கோட்டில் கலை அறிவியல் கல்லூரி அமைக்க அரசு உத்தரவிட்டது.
இதன்படி திருச்செங்கோடு அடுத்த சித்தாளந்தூரில் அர்த்தநாரீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்கப்பட்டது.
இக்கல்லூரியை முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.
இதையொட்டி, சித்தாளந்தூரில் நடந்த நிகழ்ச்சியில், சுற்றுலாத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங், திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன், கோட்டாட்சியர் தே.இளவரசி, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் மங்கையர்கரசி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments