பழுதடைந்த சாலைகளை சீரமைக்க ஒதுக்கப்பட்ட 500க்கும் மேற்பட்ட பரிசீலனை ரத்து செய்ததை கண்டித்து ஆர்ப்பாட்டம்
கோவை:
கோவை மாவட்டம் செஞ்சிலுவை சங்கம் முன்பு கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளரும், அ.திமுக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சரும், எதிர்கட்சி கொறடாவுமான எஸ்.பி வேலுமணி தலைமையில் தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்பாட்டத்தில், பெட்ரோல், டீசல் மீதான மாநில அரசின் வரிகளை உடனடியாக குறைத்தல், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வைக் ரத்து செய்யக் கோரியும்,தூய்மைப் பணியாளர்களுக்கு ஊக்கத் தொகை வழங்க கோரியும், பொங்கல் விழாவைக் கொண்டாட உதவும் வகையில் அனைவருக்கும் பொங் கல் பரிசுத்தொகை வழங்க வேண்டியும்,
கோவை மாநகராட்சியில் பழுதடைந்த சாலைகளை சீரமைக்க ஒதுக்கப்பட்ட 500க்கும் மேற்பட்ட பரிசீலனை ரத்து செய்ததை கண்டித்தும், மேலும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அ.தி.முக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் எம்.எல்.ஏக்கள் தனபால், அம்மன் கே.அர்ஜுனன், செ.தாமோதரன், கே.ஆர் ஜெயராம், அமுல் கந்தசாமி, பி.ஆர்.ஜி அருண்குமார், ஏ.கே செல்வராஜ், வி.பி கந்தசாமி, முன்னாள் எம்எல்ஏக்கள், எட்டிமடை சண்முகம், ஓ.கே சின்ராஜ், கஸ்தூரி வாசு, மற்றும் இளைஞர் அணி மாவட்டச் செயலாளர் ஆர்.சந்திரசேகர், கழக நிர்வாகிகள், உறுப்பினர்கள், உட்பட திரளானோர் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments