Breaking News

மக்கள் குறை தீர்க்கும் முகாமில் 1000க்கும் மேற்பட்ட மனுக்கள்... நலதிட்ட உதவிகளை வழங்கினார் அமைச்சர் அன்பரசன்

உத்திரமேரூர், டிச.17- 

உத்திரமேரூரில் மக்கள் குறை தீர்க்கும் முகாமில் 1000க்கும் மேற்பட்ட பொதுமக்களின் மனுக்களை பெற்றும், நலதிட்ட உதவிகளையும் வழங்கினார். தமிழக ஊரக தொழிற்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர் இந்நிகழ்வில் முன்னிலை வகித்தார்.

தமிழ்நாடு முதலமைச்சரரும் திமுக தலைவரும்மான மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுருத்தலின்பபடி காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் முகாமும் பயனாளிகளுக்கு நலதிட்ட உதவிகள் வழங்கும் விழாவும் நடைபெற்றது.இதில் தமிழக ஊரக தொழிற்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பங்கேற்று மனுக்களை பெற்றும் பயனாளிகளுக்கு பல்வேறு நலதிட்ட உதவிகளை வழங்கியும் சிறப்புரையாற்றினார்.இந்நிகழ்வினை உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர் பங்கேற்று முன்னிலை வகித்தார்.

அப்போது சிறப்புரையற்றிய அமைச்சர் தா.மோ.அன்பரசன் பொதுமக்களிடம் பெற்ற மனுக்களின் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து மனுக்களை பரிசீலனை செய்து விரைவில் மனுக்களின் கோரிக்கையினை நிறைவேற்றுவதாக உறுதியளித்தார்.

இந்நிகழ்வில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி,வருவாய் கோட்டாச்சியர் பன்னீர்செல்வம்,மாவட்ட ஊராட்சி குழு தலைவர் படப்பை ஆ.மனோகரன்,மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் நித்யா சுகுமார், உத்திரமேரூர் ஒன்றிய குழு தலைவர் ஹேமலதா ஞானசேகரன், துணை தலைவர் வசந்தி குமார் மற்றும் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள், ஒன்றிய குழு உறுப்பினர்கள்,ஊராட்சி மன்ற தலைவர் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிதிநிதிகள் மற்றும் திமுகவினர்  உள்ளிட்ட 1000க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.






No comments

Thank you for your comments