Breaking News

மாவட்ட மைய தணிக்கை தொடர்பாக ஆலோசனை கூட்டம்

 கோயம்புத்தூர்:

மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் உள்ளாட்சி அமைப்புகளின் மாவட்ட மைய தணிக்கை தொடர்பாக அனைத்துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் மாநில முதன்மை கணக்காயர் அம்பலவாணன், தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜி.எஸ்.சமீரன்   முன்னிலையில் நடைபெற்றது. 

இக்கூட்டத்தில் மாநில முதன்மை கணக்காயர் அம்பலவாணன் தெரிவித்ததாவது,

மாவட்ட நிர்வாகத்தில் ஒட்டு மொத்த செயல்பாட்டை மேம்படுத்தும் நோக்கத்தில் தான் தணிக்கையின் முக்கியத்துவம் அடங்கியுள்ளது. தணிக்கை என்பது ஒரு தவறு கண்டறியும் பொறி முறை மட்டுமே என்ற பொதுவான கருத்தை போலன்றி, அது உண்மையில் அரசின் அமைப்பை மேம்படுத்துவதற்கும் அரசு அலுவலகங்களின் செயல்பாடுகளை நெறிபடுத்துவதற்கும் உறுதுணையாக இருக்கும் அமைப்பாகும்.

மாவட்ட நிர்வாகத்தின் செயல்திறன் மற்றும் செயல்பாடுகளை மேம்படுத்துவதற்கான ஒரு கருவியாக தணிக்கையை திறம்பட பயன்படுத்த வேண்டும். மேலும் அரசின் கொள்கை முடிவு தொடர்பான சிக்கல்களை உயர் மட்டத்திற்கு கொண்டு சென்று தீர்வு காணவேண்டும்.

புதிதாக பணியில் சேர்ந்த இளநிலை உதவியாளர்களுக்கு கணக்கு மற்றும் அதனை சார்ந்த பதிவேடுகளின் பராமரிப்பு, கணக்கு மற்றும் நிதி மேலாண்மை ஆகியவற்றில் பயிற்சி அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இளநிலை உதவியாளர்களுக்கு பயிற்சி அளிக்க தணிக்கை துறையிலிருந்து நிபுணர் குழு மூலம் தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாநில முதன்மை கணக்காயர் அம்பலவாணன், அவர்கள் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் முதுநிலை துணை கணக்காயர் பீட்டர்ராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் ப்பி.எஸ்.லீலா அலெக்ஸ், மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments