Breaking News

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் 23ஆவது மாநாடு

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் மாவட்டம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் 23ஆவது மாநாடு மத்தியகுழு உறுப்பினர் சவுந்தரராஜன் தலைமையில் தொடங்கியது. 

காஞ்சிபுரம் மாவட்டம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் 23 ஆவது மாநாடு இன்று முதல் இரண்டு நாட்கள் நடைபெறும் இம்மாநாட்டில் மத்தியகுழு உறுப்பினர் சவுந்தரராஜன் தலைமையில் தொடங்கப்பட்டன. 

இவை விளக்கடி கோயில் தெருவில் அமைந்துள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் அலுவலகம் கே எஸ் பார்த்தசாரதி நினைவு இல்லத்தில் இருந்து தியாகிகளைப் போற்றும் வகையில் தியாகிகள் நினைவு ஜோதியை மத்தியகுழு உறுப்பினர் வழங்க மாவட்ட நிர்வாகிகள் பெற்றுக்கொண்டு மாநாடு நடைபெறும் ஒரு கிலோமீட்டர் தூரம்  ஜோதியை ஏந்தியபடி செஞ்சட்டை அணிந்த தொண்டர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டும் கம்யூனிஸ்டு தொண்டர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்கள் பெண்கள் என ஊர்வலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முழக்கங்கள் எழுப்பி ஆரவாரத்துடன் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெறும் மாநாட்டிற்கு சென்றடைந்தனர்.

🔥 முக்கியச் செய்திகள்

👌  லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் கணக்கில் வராத பணம், கிலோ கணக்கில் தங்கம் வெள்ளி பறிமுதல்

👌 மீண்டும் ஓர் அதிசய கிணறு... ஆர்வமுடன் பார்த்துச் செல்லும் பொதுமக்கள்

👌 போதையில் ஆம்புலன்ஸ் மீது ஏறி குத்தாட்டம்.!

👌 முதல்வர் ஸ்டாலினின் எதிர்கால திட்டங்கள் என்ன...? தெலங்கானா முதல்வர் சந்திப்பின் பின்னணி என்ன..?

👌 கருணாநிதியை விட ஸ்டாலின் பயங்கரமானவர்... முதலமைச்சர் ஸ்டாலினை சீண்டும் ஹெச்.ராஜா..

👌 பொருளாதார மேம்பாடு திட்டங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பம்


இவை இன்றைய முதல்நாள் துவக்க நிகழ்ச்சியாக இதனைத்தொடர்ந்து நிர்வாகிகள் அறிமுக கூட்டம் தொண்டர்கள் நினைவைப் போற்றும் தியாகத்தை உணர்த்தும் வகையில் மாநாடு அமையும் என தெரிவித்தனர் நாளை இரண்டாம் நாள் மாநாட்டில் சிறப்பு தீர்மானங்களை கொண்டு வந்து வாசிப்பதாகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும் என தெரிவித்தனர். 

இந்நிகழ்ச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் மத்தியகுழு உறுப்பினர் சவுந்தரராஜன், மாநில செயற்குழு உறுப்பினர் சண்முகம், மாநில குழு உறுப்பினர்  கண்ணன் மாவட்ட செயலாளர் சங்கர் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் முத்துக்குமார், நேரு மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் நிர்வாகக் குழுக்கள் என பல்வேறு தரப்பினர் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments