Breaking News

பெண்கள் தங்கும் தனியார் விடுதிகளில் நடக்கும் அவலம்... சுட்டிகாட்டிய சிஐடியு சவுந்தரராஜன்

காஞ்சிபுரம், டிச.17-

காஞ்சிபுரத்தில் உள்ள ஆயிரம் கணக்கான தனியார் தொழிற்சாலையில்  வெளிமாவட்ட பகுதியில் இருந்து அதிகளவில் பெண்கள் தனியார் விடுதியில் தங்கி பணியாற்றி வருகின்றனர். 

இந்நிலையில், அவர்கள் தங்கும் தனியார் விடுதிகளில் பல ஆயிரம் கணக்கில் பணம் வசூலித்து, ஒரே அறையில் 5 முதல் 10 வரை பெண்கள் தங்க வைக்கின்றனர். ஆனாலும்  சுத்தமான உணவு அளிக்காமல்  அதிக பணம் வசூலித்து வருகிறது தனியார் விடுதிகள்....  இதனால் பணியாற்றும் பெண்கள் பெரும் சிரம்மப்படுகின்றனர். 

இதனை தமிழக அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிஐடியு தொழிற்சங்க மாநிலத் தலைவர் சவுந்தரராஜன் வலியுறுத்தி உள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் 23ஆவது மாநாடு மத்தியகுழு உறுப்பினர் சவுந்தரராஜன் தலைமையில் தொடங்கியது. 

காஞ்சிபுரம் மாவட்டம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் 23 ஆவது மாநாடு நேற்று முதல் இரண்டு நாட்கள் நடைபெறும் இம்மாநாட்டில் மத்தியகுழு உறுப்பினர் சவுந்தரராஜன் தலைமையில் தொடங்கப்பட்டன.  


நேற்றைய முதல்நாள் துவக்க நிகழ்ச்சியாக இதனைத்தொடர்ந்து நிர்வாகிகள் அறிமுக கூட்டம் தொண்டர்கள் நினைவைப் போற்றும் தியாகத்தை உணர்த்தும் வகையில் மாநாடு அமையும் என தெரிவித்தனர் இன்று இரண்டாம் நாள் மாநாட்டில் நெசவு தொழில்,விவசாயம், தொழிலாளர்கள் மேம்பாட்டு உள்ளிட  16 விதமான முக்கிய சிறப்பு தீர்மானங்களை கொண்டு வந்து வாசித்து முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தன.

செய்தியாளர்கள் சந்திப்பில் சௌந்தரஜன் கூறியதாவது, 

காஞ்சிபுரத்தில் உள்ள ஆயிரம் கணக்கான தனியார் தொழிற்சாலை இயங்கி வருகிறது இதில் வெளிமாவட்ட பகுதியில் இருந்து அதிகளவில் பெண்கள் தனியார் விடுதியில் தங்கி பணியாற்றி வருகின்றன. 

அவர்கள் தங்கும் தனியார் விடுதிகளில் பல ஆயிரம் கணக்கில் பணம் வசூலித்து ஒரே அறையில் 5 முதல் 10 வரை பெண்கள் தங்க வைத்து உரிய சுத்தமான உணவு அளிக்காமல் தனியார் விடுதிக்கு அதிக பணம் வசூலித்து செய்து வருகிறது. 

இதனால் பணியாற்றும் பெண்கள் பெரும் சிரமத்திற்கு  உள்ளாகியுள்ளனர். இதனை தமிழக அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காஞ்சிபுரத்தில் இயங்கி வந்த நோக்கியா, பாக்ஸ்கான், மோட்டோரோலா உள்ளிட்ட பெரிய தொழிற்சாலைகள் இங்கு வந்த நிலையில் திடீரென்று மூடியதால் தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்து வாழ்கின்றனர் ஆகையால் மீண்டும் தொழிற்சாலையை மூடிவிட்டு  மீண்டும் வேறு பெயரில் இயக்கம் தொழிற்சாலை தொடங்குகின்றன ஆகையால் அவர்களுக்கு மீண்டும் நிபந்தனையுடன் அனுமதி வழங்க வேண்டும் என தொழிற்சங்கம் சார்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதிக அளவில் தொழிற்சாலையில் பணியாற்றும் தொழிலாளர்கள் இருக்கும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொழிலாளர்கள் மருத்துவ சிகிச்சைக்காக காஞ்சிபுரத்தில் 100 படுக்கை கொண்ட இஎஸ்ஐ மருத்துவமனை அமைக்க வேண்டும் மேலும் காஞ்சிபுரத்தில் ஒருகிணைந்த தொழிலாளர் துறை அலுவலகம் அமைக்க வேண்டும் என தொழிலாளர் சார்பில் கோரிக்கை   விடுத்துள்ளனர். 

இவ்வாறு  சிஐடியு தொழிற்சங்க மாநிலத் தலைவர் சவுந்தரராஜன் பேட்டி அளித்தார்.

இந்நிகழ்ச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் மத்தியகுழு உறுப்பினர் சவுந்தரராஜன், மாநில செயற்குழு உறுப்பினர் சண்முகம், மாநில குழு உறுப்பினர்  கண்ணன் மாவட்ட செயலாளர் சங்கர் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் முத்துக்குமார், நேரு மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் நிர்வாகக் குழுக்கள் என பல்வேறு தரப்பினர் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments