ஏடிஎம்-ல் கொள்ளை முயற்சி... 15 நிமிடத்தில் விரைந்து நடவடிக்கை எடுத்த காவல்துறையினருக்கு நற்சான்றிழ்.. பாராட்டுகள்...
கோவை மாவட்டம், செட்டிபாளையம் சந்திப்பின் அருகே உள்ள தன்னியக்கச் சொல்லி யந்திரம்( ஏடிஎம்) இயந்திரத்தில் நேற்று இரவு 9 மணியளவில் போலியான சாவியை பயன்படுத்தி கொள்ளையடிக்க ஹரியானாவை சேர்ந்த கலித் (வயது-30) மற்றும் சக்கீள்(வயது 20) ஆகிய இருவரும் முயன்றனர்
அப்போது அந்த வங்கியின் கட்டுப்பாட்டு அறை மூலம் எச்சரிக்கை தகவல் கிடைத்தது.
இந்த எச்சரிக்கை தகவலின் பேரில் செட்டிபாளையம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முத்துக்குமார், சிறப்பு உதவி ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் காவலர்கள் தாமதமின்றி 15 நிமிடத்திற்குள் விரைந்து சென்று கொள்ளைச்சம்பவம் நடவாமல் தடுத்தனர்.
விரைந்து நடவடிக்கை எடுத்து கொள்ளை சம்பத்தை தடுத்த செட்டிபாளையம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முத்துக்குமார், சிறப்பு உதவி ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் காவலர்களை மாவட்ட காவல் அலுவலகத்திற்கு நேரில் அழைத்து, கோவை சரக காவல்துறை துணைத் தலைவர் முனைவர்.எம்.எஸ். முத்துசாமி மற்றும் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் திறன்பட செயல்பட்டதற்கு பாராட்டி நற்சான்றிதழ் வழங்கினார்கள்.

No comments
Thank you for your comments