ஏழை பெண்களுக்கு 100% மானியத்தில் ஆடு ... விண்ணப்பிக்க அழைப்பு
ஈரோடு :
ஈரோடு மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பில், 2021-22-ம் ஆண்டில் 100 சதவீதமானியத்தில் 5 வெள்ளாடுகள் / செம்மறியாடுகள் வழங்கி பெண்களை தொழில் முனைவோராக உருவாக்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது என்று மாவட்டஆட்சித் தலைவர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்.
ஊரகபகுதியில் வசிக்கும் ஏழ்மை நிலையிலுள்ள விதவைகள் / கணவனால் கைவிடப்பட்ட / ஆதரவற்ற பெண் பயனாளிகளுக்கு 100 சதவீத மானியத்தில் 5 வெள்ளாடுகள் / செம்மறியாடுகள் வழங்கி பெண்களை தொழில் முனைவோராக உருவாக்கி தங்கள் வாழ்வாதாரத்தை முன்னேற்றிக் கொள்ள மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் சிறப்புத் திட்டமான 5 வெள்ளாடுகள் / செம்மறியாடுகள் வழங்கும் திட்டம் ஈரோடு மாவட்டத்தில் இவ்வாண்டு செயல்படுத்தப்படவுள்ளது.
இத்திட்டம் ஈரோடு மாவட்டத்தின் அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் செயல் படுத்தப்பட்டு, ஊராட்சி ஓன்றியத்திற்கு தலா 100 பயனாளிகள் வீதம் ஊரக பகுதியில் வசிக்கும் ஏழ்மை நிலையிலுள்ள விதவைகள் / கணவனால் கைவிடப்பட்ட / ஆதரவற்ற 1400 பெண் பயனாளிகளுக்கு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. ஒவ்வொரு பயனாளிக்கும் 5 வெள்ளாடுகள் / செம்மறியாடுகள் வாங்குவதற்குரூ.17,500/-ம், தீவன செலவினம் ரூ.1,000/-ம், காப்பீட்டுத் தொகைரூ.875/-ம் செலவினம் மேற்கொள்ளப்படும். மொத்தப் பயனாளிகளில் 30 சதவீதம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினராக பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள்.
தகுதிகள்:
1. ஊரகபகுதியில் வாழும் ஏழ்மைநிலையில் உள்ளவிதவைகள் / கணவனால் கைவிடப்பட்ட / ஆதரவற்ற பெண் பயனாளி மட்டும் பயன்பெறலாம்.
2. நிலமற்றவிவசாய கூலித்தொழில் மேற்கொள்ளும் பெண் பயனாளியாக இருக்கவேண்டும்.
3. சம்மந்தப்பட்ட கிராம ஊராட்சியில் நிரந்தரமாக குடியிருப்பவராக இருக்கவேண்டும்.
4. பயனாளி 60 வயதிற்குள் இருக்கவேண்டும்.
5. பயனாளி அல்லது குடும்பத்தில் எவரேனும் (கணவர், தந்தை, தாய், மகன், மகள், மாமனார், மாமியார், மருமகன், மருமகள்) மத்திய / மாநில அரசு மற்றும் அரசுசார்ந்த நிறுவனங்கள் / கூட்டுறவு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் பணியில் இருக்கக்கூடாது.
6. பயனாளி தற்போது சாந்தமாக ஆடுகள் / மாடு / எருமை வைத்திருக்கக் கூடாது. முதல் முறை கால்நடை உரிமையாளராக இருக்கவேண்டும்.
7. அரசின் விலையில்லா கறவை பசுக்கள் வழங்கும் திட்டம் மற்றும் விலையில்லா ஆடுகள் வழங்கும் திட்டம் ஆகிய திட்டங்களில் ஏற்கனவே பயனடைந்தவராக இருக்கக் கூடாது.
8. 30 சதவீதம் பயனாளிகள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பினை சேர்ந்தவராக இருக்கவேண்டும்.
மேற்காணும் தகுதிவாய்ந்த பெண் பயனாளிகள் அருகில் உள்ள கால்நடை மருந்தகங்களில் விண்ணப்பத்தினை பெற்றுக்கொள்ளலாம். மேலும் பயனாளி நிரந்தரமாக குடியிருக்கும் கிராம ஊராட்சியின் கிராமநிர்வாகஅலுவலரிம் (ஏயுழு) பயனாளிநிலமற்றவர் மற்றும் இதரதகுதிகள் உள்ளது என்பதினை சரிபார்த்ததற்கான சான்றிற்கு, விண்ணப்பத்தில் கையொப்பம் பெற்று, சம்மந்தப்பட்ட கிராம ஊராட்சிக்கு உட்பட்ட கால்நடை மருந்தகத்தில் விண்ணப்பத்தினை வழங்கவேண்டும்.
(01.12.2021 முதல் 09.12.2021 வரைபூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பெறப்படும்) எனவே தமிழக அரசின் 5 வெள்ளாடுகள் / செம்மறியாடுகள் வழங்கும் திட்டத்தினைதகுதிவாய்ந்தபெண் பயனாளிகள் பயன்படுத்தி, தங்களை தொழில் முனைவோராக உருவாக்கி வாழ்வாதாரத்தினை மேம்படுத்திட, இந்த அரியவாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு ஈரோடுமாவட்ட ஆட்சித்தலைவர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்.
No comments
Thank you for your comments