Breaking News

02-01-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று 17-வது மெகா கோவிட் தடுப்பூசி முகாம்... பொதுமக்களுக்கு அழைப்பு

கோவை :

தமிழகத்தில் கோவிட்-19 தடுப்பூசி செலுத்தும் பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. கோவை மாவட்டத்தில் 18 வயதிற்கு மேற்பட்ட 26.5 லட்சம் நபர்களுக்கு முதல் தவணையும், 21.1 லட்சம் நபர்களுக்கு இரண்டாம் தவணையும் கோவிட்-19 தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.  மாவட்டத்தில் 18 வயதிற்கு மேற்பட்ட 94.2 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும் 72.3 சதவீதம் பேருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுள்ளன. 

தமிழக அரசின் உத்தரவிற்கிணங்க, மெகா தடுப்பூசி முகாம்கள் கோவை மாவட்டத்தில்  தொடங்கி இதுவரை 16 மெகா கோவிட் தடுப்பூசி முகாம்கள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. 

இதன்மூலம் 14.4 லட்சம் பேருக்கு கோவிட்-19 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. 02.01.2022 ஞாயிற்றுக்கிழமை அன்று 17-வது மெகா கோவிட் தடுப்பூசி முகாம் நடத்த திட்டமிடப்பட்டு அதற்கான விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கிராமப்புறங்களில் 448 முகாம்களும் மாநகராட்சிப்பகுதிகளில் 156 முகாம்கள் மொத்தம் 604 தடுப்பூசி மையங்கள் நிறுவப்பட்டுள்ளன. இதுவரை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத பொது மக்கள் அனைவரும் இந்த முகாமினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இரண்டாம் தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டால் மட்டுமே உருமாறி கொண்டிருக்கும்  வைரசுக்குதம் எதிரான நோய் எதிர்ப்பாற்றல் முழுமையாக உருவாகும். 

தற்சமயம் ஒமைக்ரான் என்னும் உருமாறிய கொரோனா பரவி வரும் சூழலில் வெளிநாடுகளிலிருந்து வருபவர்கள் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறார்கள்.

எனவே, பொது மக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள மேற்படி முகாம்களில் தடுப்பூசி செலுத்தி பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்.

No comments

Thank you for your comments